டாட்டா நானோவை ஞாபகப்படுத்தும் டோயோட்டாவின் குட்டி கார்... இந்தியாவில் விரைவில் அறிமுகம்!

Toyota Suzuki tiny battery electric vehicle : டோக்கியோ மோட்டர் ஷோவில் ஹிண்ட் கொடுத்த வைஸ்-பிரசிடெண்ட்

Toyota Suzuki tiny Battery Electric Vehicle :  அனைவருக்கும் டாட்டாவின் நானோ கார் ஞாபகத்தில் இருக்கும். அதன் குட்டி உருவம், விலை, வித்தியாசமான நிறங்களுக்காகவே அது அதிகம் விரும்பப்பட்டது. ஆனாலும் போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத காரணத்தால் அந்த கார் உற்பத்தி கைவிடப்பட்டது. தற்போது டொயோட்டா – சுசுக்கி நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டொயோட்டா பி.ஈ.வி கார். இதில் இருவர் மட்டுமே அமர முடியும்.

Toyota Suzuki tiny Battery Electric Vehicle – இந்தியாவில் எப்போது?

டொயோட்டா – சுசுக்கி நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இதில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல இயலும்.

டோக்கியோவில் நடைபெற்ற 2019 டோக்கியோ மோட்டர் ஷோவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் இதன் விற்பனையை உறுதி செய்தார் டொயோட்டா மோட்டர் கார்ப்பரேசன் எக்ஸ்க்யூட்டிவ் வைஸ் பிரசிடெண்ட் ஷிகேக்கி டெரஷி.

மிக குறைவான தூரத்தை கடப்பதற்கு தேவைப்படும் ஒரு வாகனமாக இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக பட்சமாக 60 கி.மீ வேகத்தில் இந்த கார் பயணிக்கும்.

2490 மி.மீ நீளம், 1290 மி.மீ அகலம், 1569 மி.மீ உயரம் என்று இதன் அளவுகள் உள்ளது. டோக்கியோ போன்ற மிகவும் நெரிசல் மிக்க நகரின் பார்க்கிங் வசதிகளை கருத்தில் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டது. இதன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் ஆக சுமார் 5 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறது.

இதே போன்று பல்வேறு வகையான பேட்டரி எலெக்ரிக் வாகனங்களையும், மூன்று சக்கர வாகனங்களையும் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகிறது டொயோட்டா நிறுவனம்.

டோக்கியோ மோட்டார் ஷோவில் இந்த பி.ஈ.வி கார்களோடு டொயோட்டா நிறுவனம் ரைஸ், யாரிஸ், எல்.க்யூ, கான்செப்ட், கோப்பன் ஜி.ஆர் ஸ்போர்ட் போன்ற கார்களையும் அறிமுகம் செய்தது.

மேலும் படிக்க : முடிவுக்கு வந்த பீட்டிலின் உற்பத்தி… 81 ஆண்டு காலம் பீட்டில் கடந்த வந்த பாதை!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close