ரூ. 8000த்திற்கு லாவாவின் புதிய ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் ஒரு பார்வை...

இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது

Lava Z91 Smartphone : மார்ச் மாதம் லாவா நிறுவனம் லாவா Z91 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்திருந்தது. போனின் ஆரம்ப விலை ரூ. 9,999 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த போன் இந்தியாவில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த போனின் விலையினை குறைத்துள்ளது லாவா. வாடிக்கையாளர்கள் தற்போது 7,999 ரூபாய்க்கு இந்த போனை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : 10 ஜிபி RAMகளில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

Lava Z91 Smartphone சிறப்பம்சங்கள்

18:9 டிஸ்பிளே டூ ஸ்கிரீன் ரேசியோ கொண்டுள்ள இந்த போனின் அளவு 5.7 இன்ச் ஹெச்.டி ஆகும்.

ரெசலியூசன் : 1440×720 பிக்சல்கள்

2.5டி கர்வ்ட் டிஸ்பிளே

0.7 நொடிகளில் ஃபேஸ் ரெகக்னைசேசன்

மீடியாடெக் நிறுவனத்தின் MT6739 ப்ரோசசர் இந்த போனின் சிறப்பம்சங்கள் ஆகும்.

கிராபிக்ஸ் பிராசசர் யூனிட்டாக ‎PowerVR GE8100 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது .

3ஜிபி ரேம் 32 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ்

பேட்டரி : 3,000mAh திறன் கொண்ட நான் ரிமூபவள் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயங்குதளம் : ஆண்ட்ராய்ட் 7.1 நக்கட் இயங்கு தளத்தின் அடிப்படையில் கொண்டு உருவாக்கப்பட்ட லாவாவின் ஸ்டார் ஓ.எஸ். 4.2 ஸ்கின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஆசூஸ்சின் புதிய போன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close