LG 5G Technology Smartphone : இந்த வருடத்தின் கேட்ஜெட் ஹாட் டாபிக் 5ஜி தொழில்நுட்பமும் அதில் வெளி வர இருக்கும் போன்களும் தான். இதோ வெளியாகின்றது அதோ வெளியாகின்றது என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், சாம்சங் கேலக்ஸி இன்று வரை 5ஜி வேரியண்டை கொண்ட எஸ்10 பிப்ரவரி இறுதியில் தான் வெளியீடாகிறது.
Advertisment
LG 5G Technology Smartphone சிறப்பம்சங்கள்
பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தில் எல்.ஜியின் ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசரில் இயங்க உள்ளது இந்த போன்.
இதற்கு முன்பு வெளியான ப்ரோசசர்களை விட 45% வேகமாக இயங்கும் இந்த ப்ரோசசர்.
4000mAh பேட்டரி செயல் திறன்
செல்போன் உபயோகத்தால் உருவாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் வாப்பர் சேம்பர் தொழில்நுட்பத்துடன் வெளிவர உள்ளது இந்த போன்.
வட அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இந்த போன்கள் முதலில் கிடைக்கும். 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று 2019ம் ஆண்டு தன்னுடைய 5ஜி போனை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது எல்.ஜி.நிறுவனம்.
இந்த ஹையர் எண்ட் போனில் இரண்டாவது திரையும் வருகிறது. அதனை அட்டாச் அல்லது டிட்டாச் செய்து கொள்ளலாம்.
3டி கேமரா மற்றும் சவுண்ட் டெக்னாலஜியுடன் வெளியாகலாம் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் புதிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.