LG Q60 smartphone specifications, price, launch, availability : எல்.ஜி. நிறுவனத்தின் க்யூ60 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. MLT-STD 810G தரச்சான்றிதழ் பெற்ற இந்த ஸ்மார்ட்போன் ஃபுல்விஷன் டிஸ்பிளே மற்றும் டி.டி.எஸ்.எக்ஸ் 3டி சரவுண்டிங் சவுண்டடன் வெளியாகியுள்ளது. இந்த வருடம் பெர்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
LG Q60 விலை மற்றும் விற்பனை
இந்த ஸ்மார்ட்போன் மொரோக்கன் நீல நிறத்தில் வெளியாகியுள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் ஆகும். இதன் விற்பனை ஆன்லைன் ப்ளாட்பார்ம்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
LG Q60 full specifications
1520 x 720 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை-ஐ அடிப்படையாக கொண்ட எல்.ஜி. யூ.ஐ. ஸ்கின் டாப் இயங்கு தளத்தில் இயங்கி வருகிறது. வெப்பநிலை, குளிர், அதிர்ச்சி, ஈரப்பதம் மற்றும் வைப்ரேசனை கண்டறியும் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் எம்.இ. 6762 ஹேலியோ பி22 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் மெமரியை மைக்ரோ எஸ்டி வழியாக 2டிபி வரை அதிகரித்துக் கொள்ள இயலும்.
இரட்டை பின்பக்க கேமராக்களை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 16 எம்.பி. லென்ஸ் மற்றும் 5 எம்.பி. லென்ஸ் என இரண்டு லென்ஸ்களை பின்பக்கமும், முன்பக்க கேமரா 13 எம்.பி. செயற்திறனையும் கொண்டுள்ளது. இதன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மௌண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மொத்த எடை 172 கிராம் ஆகும்.
மேலும் படிக்க : 28ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 7டி… சிறப்பம்சங்கள் என்னென்ன?