Advertisment

எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்... 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை

Lotus Evija World's powerful electric hypercar price : இந்த ஹைப்பர் காரின் விலை 14 கோடி என்பது தான் நெஞ்சில் இடி இறக்குகிறது.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lotus Evija World's powerful electric hypercar specifications

Lotus Evija World's powerful electric hypercar specifications

Lotus Evija World's powerful electric hypercar specifications : இந்தியாவில் தற்போது தான் எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் மற்றும் விற்பனை வேகம் பெற்று வருகிறது. ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் கார்கள் அதிவேகத்தில் விற்பனையில் சூடுபிடிக்க துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் புகாட்டி, டெஸ்லா, லோட்டஸ் போன்ற நிறுவனங்கள் தலை சிறந்த கார்களை வடிவமைத்து விற்பனை செய்துவருகின்றன.

Advertisment

World's powerful electric hypercar specifications : விலைதான் கோடியில் இருக்கிறது.  ப்ரிட்டைன் நாட்டை சேர்ந்த கார் நிறுவனம் ஒன்று லோட்டஸ் எவிஜா என்ற எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ளது. 9 நிமிடங்களில் முழுவதும் சார்ஜாகும் இந்த காரின் குதிரைத்திறன் 2000PS (PS - pferdestarke (in Gemen it means Horsepower) ஆகும்.

மேலும் படிக்க : டாட்டா நெக்ஸான் : இந்தியர்களின் ஃபேவரைட் கார் இது தான்!

Lotus Evija World's powerful electric hypercar specifications

0-வில் இருந்து 100 கி.மீ வேகத்திற்கு இந்த கார் செல்ல வெறும் 3 நொடிகளே எடுத்துக் கொள்கிறது. இந்த காரின் மொத்த எடை 1680 கிலோவாகும். உலகின் மிகவும் குறைந்த எடை கொண்ட ஹைப்பர் கார் இது தான். 2020ம் ஆண்டு தான் இது தன்னுடைய உற்பத்தியை தயார் செய்ய உள்ளது. இதன் டார்க் 1700Nm ஆகும். வில்லியம்ஸ் நிறுவனம் வழங்கும் லித்தியம் ஐயன் பேட்டரியில் இயங்குகிறது இந்த கார்.

Lotus Evija World's powerful electric hypercar specifications

Lotus Evija World's powerful electric hypercar வேகம் மற்றும் சார்ஜ்

இந்த ஹைப்பர் காரில் மொத்தம் 4 மோட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோட்டரும் 500 குதிரைத்திறனை உற்பத்தி செய்கிறது. இதற்கு முன்பு புகாட்டி நிறுவனத்தின் சிரான் மட்டுமே 1500 குதிரைத்திறனை  பெற்றிருந்தது. அதனால் தான் இந்த காரின் வருகையை உலகம் கொண்டாடி வருகிறாது. வெறும் 9 நிமிடங்களில் 320 கி.மீ வேகத்தை எட்டுகிறது. உலகின் மிக சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் கார் இதுவாக இருக்கும். 350 கி.வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்தி வெறும் 18 நிமிடங்களில் உங்களால் இந்த மொத்த காரின் பேட்டரியையும் சார்ஜ் செய்து கொள்ள்ளலாம். தற்போது வரை உலகின் வேகமாக சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் கார் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காராகும். 80% பேட்டரி சார்ஜ் ஆக 35 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

Lotus Evija World's powerful electric hypercar specifications

காரின் எடை

லோட்டஸ் நிறுவனம் முழுக்க முழுக்க தன்னுடைய குறைந்த எடை கொண்ட கார்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. அதனால் எலைஸ், எவோரா, இஸ்பிரிட் வரிசையில் தற்போது எவிஜா. Evija ( pronounced E-vi-ya). பேட்டரி மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் இந்த காரின் எடை ஆயிரம் கிலோ மட்டுமே. அவை அனைத்தையும் சேர்த்தால் அதன் மொத்த எடை 1680 கிலோவாகும். மிக குறைந்த எடை கொண்ட முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். எடை விசயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் இந்நிறுவனம் தங்களால் இயன்ற வரை எஞ்சின் மற்றும் பேட்டரியை காரின் மையப்பகுதியில் ஃபிட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த ஹைப்பர் காரின் விலை 14 கோடி என்பது தான் நெஞ்சில் இடி இறக்குகிறது.

மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி  வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment