Advertisment

Lunar Eclipse 2020 in India Updates: 2020-ன் முதல் சந்திர கிரகணத்தைப் பார்த்து ரசித்த மக்கள்!

Lunar Eclipse (Chandra Grahan) 2020 Tamil Nadu Timings Updates: ஜனவரி 10 ஆம் தேதி இரவு 10:37 மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம், ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 2:42 மணி வரை தொடர்ந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lunar eclipse 2020 live

lunar eclipse 2020 live

Lunar Eclipse (Chandra Grahanam) 2020 Tamil Nadu Timings Updates: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி இரவு நிகழ்ந்தது. இந்த கிரகணம் சுமார் நான்கு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் நீடித்தது. இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் இது காணப்பட்டது. இந்தியாவில், ஜனவரி 10 ஆம் தேதி இரவு 10:37 மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம், ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 2:42 மணி வரை தொடர்ந்தது.

Advertisment

இந்தியாவைத் தவிர, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பகுதி, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியிலும் இந்த சந்திர கிரகணம் காணப்பட்டது. சிறப்பு நிகழ்வுகள் எதுவும் தேவையில்லை என்பதால் இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓநாய் சந்திர கிரகணம் முழு விவரம்

முழு சந்திர கிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது. இந்த ஆண்டு, மொத்தம் ஆறு கிரகணங்கள் நிகழும். அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களாகவும், இரண்டு சூரிய கிரகணங்களாகவும் இருக்கும். அடுத்த சந்திர கிரகணம் ஜூன் மாதத்திலும், மூன்றாவது சந்திர கிரகணம் ஜூலை மாதத்திலும், நான்காவது நவம்பர் மாதத்திலும் நிகழும்.

 

Live Blog

lunar eclipse 2020 in indian january 10 live updates: 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்














Highlights

    22:41 (IST)10 Jan 2020

    தொடங்கியது சந்திர கிரகணம்...

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த சந்திரகிரகணம் என்பது பூமியின் புறநிழல் (Penumbra) நிலவின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் நிலவு பூமியின் உட்புற நிழல் வரை பயணிக்காது.

    22:18 (IST)10 Jan 2020

    அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

    ஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டின் முதல் வான நிகழ்வாகும். இரண்டாவது  சந்திர கிரகணம் ஜூன்(5 மற்றும் 6) மாதத்திலும், மூன்றாவது  ஜூலை (4 மற்றும் 5) மாதத்திலும், நான்கவாது சந்திர கிரகணம் நவம்பர் ( 29-30)மாதத்திலும்  நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    21:14 (IST)10 Jan 2020

    11ம் தேதி காலை 02:40 க்கு நிறைவு

    இந்த சந்திர கிரகணம் இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளில் தெரியும். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தை மக்கள் பார்க்க இயலும். இந்த சந்திர கிரகணம் இரவு 10:30 மணிக்கு துவங்கி காலை 12:40 மணிக்கு உச்சத்தை அடைகிறது. பின்பு இந்த சந்திர கிரகணம் 11ம் தேதி காலை 02:40 க்கு நிறைவடைகிறது. இதனை வெறும் கண்களாலே மக்கள் பார்க்க இயலும்.

    20:53 (IST)10 Jan 2020

    பெனும்ப்ரல் லூனார் எக்ளிப்ஸ்

    சந்திர கிரகணத்தை அறிவியல் முறையில் பெனும்ப்ரல் லூனார் எக்ளிப்ஸ் (penumbral lunar eclipse) என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வின் போது சந்திரன் முழுவதும் இருளால் மூழ்கப்படுவதோ, அல்லது பளீர் சிவப்பு நிறத்திலோ ஆவதில்லை. இந்த வகை கிரகணங்கள் இந்த வருடத்தில் மொத்தம் நான்கு முறை நடைபெற உள்ளது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு பௌர்ணமி நாளின் போது, பூமியின் நிழலில் பயணிக்கும் போது தோன்றும். முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.

    20:11 (IST)10 Jan 2020

    பாதி சந்திரகிரகணம் என்றால் என்ன?

    பாதி சந்திரகிரகணம் என்பது பூமியின் உட்புற நிழல் நிலவின் ஒரு பகுதியை மறைக்கும் நிகழ்வாகும்.  ஆனால் இந்த சந்திரகிரகணம் என்பது பூமியின் புறநிழல் (Penumbra) நிலவின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் நிலவு பூமியின் உட்புற நிழல் வரை பயணிக்காது.

    19:42 (IST)10 Jan 2020

    2020 சந்திர கிரகணங்கள்

    2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.

    19:21 (IST)10 Jan 2020

    வெறும் கண்களால் பார்க்கலாமா?

    சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் , இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்று அறிவியாலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    19:01 (IST)10 Jan 2020

    ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை

    கருநிழல்: பூமி நிழலின் கருமையான மற்றும் உள்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் சூரிய ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் முழுமையான கிரகணத்தைப் பார்க்கிறார்.

    புறநிழல் : இது நிழலின் வெளிப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை

    18:14 (IST)10 Jan 2020

    புறநிழல் சந்திர கிரகணம்

    பொதுவாக, புவியின் நிழலை

    கருநிழல் (Umbra)
    புறநிழல் (Penumbra)

    என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

    இன்று புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் நடக்கவிருக்கிறது.

    lunar eclipse 2020 :

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தை நிரைய பேர் சரியான பாதுகாப்புடன் கண்ணாடி அணிந்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மேக மூட்டமாக இருந்தால் இன்று நடைபெறும் நான்கு மணி நேர சந்திரகிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம். இந்த சந்திர கிரகணத்தை பொதுவாக ”வொல்ஃப் மூன் எக்ளிப்ஸ்” என்று அழைப்பார்கள். இது போன்று இந்த வருடத்தில் மேலும் மூன்று சந்திர கிரகணங்கள் நடைப்பெறவிருக்கிறது.

    சந்திர கிரகணத்தை அறிவியல் முறையில் பெனும்ப்ரல் லூனார் எக்ளிப்ஸ் (penumbral lunar eclipse) என்று அழைப்பார்கள். இந்த நிகழ்வின் போது சந்திரன் முழுவதும் இருளால் மூழ்கப்படுவதோ, அல்லது பளீர் சிவப்பு நிறத்திலோ ஆவதில்லை. இந்த வகை கிரகணங்கள் இந்த வருடத்தில் மொத்தம் நான்கு முறை நடைபெற உள்ளது. சந்திரகிரகணம் என்பது முழு நிலவு பௌர்ணமி நாளின் போது, பூமியின் நிழலில் பயணிக்கும் போது தோன்றும். முழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.

    Lunar Eclipse
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment