Advertisment

Mahindra XUV300 : 4 டிஸ்க் பிரேக்குகள், 7 ஏர் பேக்குகள் என களமிறங்கும் மகிந்த்ராவின் புதிய SUV கார்

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லாமல் இருப்பது தான் இந்த வடிவமைப்பில் குறையாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahindra XUV300 Launch India, Mahindra XUV300 specifications, Mahindra XUV300 price

Mahindra XUV300 Launch India

Mahindra XUV300 Launch India : தென் கொரியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்ஸாங்யோங் இந்தியாவில் மகிந்த்ரா & மகிந்த்ரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கூட்டு தயாரிப்பு நிறுவனத்தின் முதல் காரான ஸ்ஸாங்யோங் டிவோலி 2015ம் ஆண்டு தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Advertisment

Mahindra XUV300 Launch India

அதன் தொடர்ச்சியாக இந்தியாவில், இந்த நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பில் XUV300 என்ற காரினை வருகின்ற பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்த உள்ளனர். இதன் அமைப்பு மற்றும் உருவாக்கம் அனைத்தும் ஸ்ஸாங்யோங் டிவோலியினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

Mahindra XUV300 Launch India Mahindra XUV300 Interior

Tivoli என்பது இத்தாலியில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இதனை ரிவர்ஸ்ஸில் படித்தால் ilovit என்று ஒலியினை உருவாக்கும். அதனால் தான் அந்த நகரத்தின் பெயரினை இந்த கார்களுக்கு இந்நிறுவனம் வைத்திருக்கிறது.

மகிந்த்ரா நிறுவனத்தின் நுவோஸ்போர்ட் மற்றும் TUV300 கார்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகும் SUV கார் தான் இந்த XUV300.

ஸ்ஸாங்யோங் டிவோலியை அடிப்படையாக கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டாலும், இந்திய சந்தைகளுக்கு ஏற்ற வகையில், இதில் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு மகிந்த்ரா இந்த காரில் ஏற்படுத்தியுள்ளது.

எல்.ஈ.டி. டேடைம் ரன்னிங் லேம்ப், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், தொடு திரையுடன் கூடிய இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் இதர சிறப்பம்சங்களுடன் வெளியாகிறது இந்த கார்.

உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள Mahindra XUV300

  • இது நாள் வரையில் ஃபோர்ட் நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட்ஸ் நிறுவனம் மட்டுமே 6 ஏர்பேக்குகளை பாதுகாப்பிற்காக வழங்கியது. ஆனால் XUV300 காரானது 7 ஏர் பேக்குகளுடன் வெளியாகிறது.
  • அதே போல், 17 இன்ச் நீளம் கொண்டுள்ள டிஸ்க் ப்ரேக்குகள், வாகனத்தின் நான்கு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட் கார்களில் நான்கு டிஸ்க் ப்ரேக்குகளை பெற்றுள்ள முதல் கார் இது தான்.
  • எலக்ட்ரானிக்ல் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஏ.பி.எஸ் மற்றும் ஈ.பி.டி போன்ற இதர பாதுகாப்பு சிறப்பம்சங்களும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 121 bhp மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் என மிகவும் பவர்புல்லான காராக இது வந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.
  • இந்த காரின் எல்க்ட்ரிக் வெர்சன் வருகின்ற 2020ல் வெளியாக இருப்பதாக மகிந்த்ரா அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : 41 கோடி ரூபாய் விலையில் வெளிவர இருக்கும் புகாட்டியின் ஹைப்பர் கார்...

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment