Messenger needs Facebook account to sign up : முன்பெல்லாம் ஃபேஸ்புக் கணக்கை டீ-ஆக்டிவ் செய்தாலும், நம்மால் அதன் மெஸஞ்சரை பயன்படுத்திக் கொள்ள இயலும். ஆனால் தற்போது அதனை செய்ய இயலாது என்று அறிவித்துள்ளது முகநூல். இந்த அதிரடி அறிவிப்பை முகநூல் தங்களின் அதிகாரப்பூர்வ உதவி மையம் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளது. மெசேஞ்சரை தனியாகவும் பயன்படுத்தும் வசதியும் பயனர்களுக்கு இதற்கு முன்பு இருந்தது.
Advertisment
ஆனால் இனி முகநூல் கணக்கு இருந்தால் மட்டுமே நம்முடைய உறவினர்கள், நண்பர்களுடன் மெசேஞ்சரில் சாட் செய்ய இயலும். பார்த்த வரையில் நிறைய மெசெஞ்சர் பயனாளர்கள் முகநூல் கணக்குகள் வைத்துள்ளனர். முகநூல் கணக்குகள் இல்லாமல் ஏற்கனவே மெசெஞ்சரை பயன்படுத்தும் நபர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் புதிதாக வரும் பயனாளர்கள் நிச்சயமாக அப்படி முகநூல் கணக்கு இல்லாமல் மெசெஞ்சரை பயன்படுத்த இயலாது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பேஸ்புக், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க இருப்பதாக மார்க் ஸ்க்கர்பர்க் அறிவித்திருந்த நிலையில் அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த இலக்கை மையமாக கொண்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.