Mi Max Mi Note Series smartphones : சியோமி நிறுவனங்கள் மை மேக்ஸ் ( Mi Max) மற்றும் மை நோட் (Mi Note) சீரியஸில் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிவராது என்று அந்நிறுவனத்தின் தலைவர் லெய் ஜுன் அறிவித்துள்ளார்.
Mi Max Mi Note Series smartphones : இந்த சீரியஸில் புதிய போன்கள் இல்லை
சீனாவின் சமூக வலைதளமான வெய்போவில் இது குறித்து லெய் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில் மை மேக்ஸ் மற்றும் மை நோட் சீரியஸில் இந்த வருடம் புதிய போன்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் இந்த சீரியஸில் புதிய போன்கள் வெளியாகுமா என்பதும் சந்தேகம் தான்.
ஹையர் எண்ட் ப்ளாட்ஃபார்ம்களில் புதிய ஸ்மார்ட்போன்கள் உருவாக்குவதிலும், ப்ரிமியம் ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதிலும் சியோமி கவனம் செலுத்தி வருகிறது. மேலும் மார்கெட்டில் புதிய போன்கள் மூலமாக மக்களை கவரவும் அதிக சிரத்தை எடுத்து வருகிறது.
மை 9 (Mi 9), மை மிக்ஸ் (Mi Mix) மற்றும் சி.சி. சீரியஸ்களில் தொடர்ந்து புதிய போன்கள் வெளியாகும் என்பதையும் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மை மேக்ஸ் போன்கள் மிகப்பெரிய டிஸ்பிளே கொண்டு வெளியான போன்கள். அதன் திரை மற்றும் பேட்டரிகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். 6.5 இன்ச் திரையுடன் வெளியான சியோமியின் முதல் போன் இதுவாகும்.
மை நோட் சீரியஸில் வந்த போன்கள் மிட் ரேஞ்ச் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடைசியாக வெளியான மை மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பேட்டரி பேக் அப் 5500mAh ஆகும். இந்த அளவு பேட்டரி செயல் திறன் கொண்ட போன்களை இன்று வரை சியோமி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ! உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…