/tamil-ie/media/media_files/uploads/2018/12/Infinity-n12-micromax-759.jpg)
Micromax Infinity N11 and N12
Micromax Infinity N11 and N12 : மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனம் N சீரியஸில் இரண்டு புதிய போன்களை தற்போது வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பட்ஜெட் போன்களில் அதிக அளவு முக்கியத்துவம் செலுத்தி வரும் இந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் இரண்டு போன்களின் விலையும் 10,000க்குள் தான். Micromax Infinity N11 போனின் விலை ரூ. 8,999 ஆகும். Micromax Infinity N12 போனின் விலை ரூ. 9,999 ஆகும்.
மேலும் படிக்க : ரூ. 6100ல் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா ?
Micromax Infinity N11 and N12 போன்களின் சிறப்பம்சங்கள்
இந்த போனின் அளவானது 6.19 இன்சாகும். எச்.டி + ரெசலியூசன் திரை கொண்டுள்ளது.
18.9:9 ஸ்கிரீன் டூ டிஸ்பிளே ரேசியோவை கொண்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டிருக்கிறது இந்த போன்.
மீடியாடெக் ஹெலியோவின் பி22 பிராசசர் இந்த இரண்டு போன்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
12MP + 5MP திறன் கொண்ட இந்த கேமராக்களில் இரண்டாவது கேமரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டதாகும்.
8MP செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. Micromax Infinity N12 போனில் 16 MP சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
N11 போன் 2ஜிபி RAM மற்றும் 32ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாகிறது. ஆனால் N12 போன் 3ஜிபி RAM மற்றும் 128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாகிறது
ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் மற்றும் ஃபேஸ் ரெகக்னேசன் சிறப்பம்சங்களுடன் வெளியாகிறது இந்த போன்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் தடையின்றி பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேட்டரியின் திறன் 4000 mAh ஆகும்.
ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்ஹ்டில் இந்த போன் இயங்குகிறது.
க்ராவிட்டி, பிராக்ஸிமிட்டி, லைட் சென்சார்கள் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.