ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

5000 ரூபாய் பட்ஜெட் போன்களை இந்தியர்கள் விரும்புவதில்லை - மொபிஸ்டார் நிறுவனத்தின் இயக்குநர்

By: Updated: December 15, 2018, 03:17:38 PM

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.

Mobiistar C1 Shine சிறப்பம்சங்கள் :

மொபிஸ்டார் சி1 ஷைன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த போனின் விலை 6,100 ரூபாய் ஆகும். 18:9 என்ற அளவிலான அஸ்பெக்ட் ரேசியோவுடன் வரும் இந்த போனில் 8 எம்.பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 3000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏற்கனவே சியோமி மற்றும் ரியல்மீ போன்ற நிறுவனங்கள் புதிய புதிய போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனாலும் இவர்களுக்கு புதிய போட்டியாக களம் இறங்குகிறது மொபிஸ்டர்.

மேலும் படிக்க : 8000 ரூபாய்க்கு வெளியாகும் லாவாவின் புதிய போன்

Mobiistar C1 Shine நிறுவர் அளித்த சிறப்புப் பேட்டி

இந்நிறுவனத்தின் இணை நிறுவரான கார்ல் ந்ங்ஙோ, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் “நாங்கள் எங்கள் போனின் சிறப்பம்சங்களில் சிறந்தவையை மட்டுமே தர விரும்புகிறோம். தேவையற்ற அனைத்தையும் தருவதைவிட தேவையான, முக்கியம் வாய்ந்த சில சிறப்பு அம்சங்களை மட்டுமே தர விரும்புகிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த போன்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களாக நாங்கள் கருதுவது ஃப்ரெண்ட் ஃபேசிங் கேமரா தான். வாடிக்கையாளர்கள் பட்ஜெட் விலையில், மிகச் சிறந்த செல்ஃபி கேமராக்கள் கொண்ட போன்களை எதிர்பார்க்கிறார்கள்.  இந்தியாவில் 500 இடங்களில் விநியோகஸ்தர்களும், 1000 இடங்களில் சேவை மையங்களையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம்.

5000 ரூபாய் பட்ஜெட் போன்களை இந்தியர்கள் விரும்புவதில்லை

பட்ஜெட் போன்கள் பற்றி அவர் குறிப்பிடுகையில், இந்தியாவில் வாடிக்கையாளர்கள் 5000 ரூபாய்க்கு போன்கள் வாங்குவதை விரும்புவதில்லை. ரூ. 5000 – 10,000 விலையில் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட போன்களில் முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : ரூ. 6000க்கு கிடைக்கும் ஆசூஸ் நிறுவனத்தின் புதிய போன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Mobiistar c1 shine specifications price and availability in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X