/tamil-ie/media/media_files/uploads/2018/12/Microsoft-Surface-Go.jpg)
Microsoft Surface Go
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ (Microsoft Surface Go ) என்ற லேப்டாப்பை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது அந்நிறுவனம். 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி eMMC வேரியண்ட்டின் வீலை ரூ.38,599 ஆகும். 8ஜிபி RAM மற்றும் 128 ஜிபி SSD வேரியண்ட்டின் விலை ரூ.50,999 ஆகும். ஃப்ளிப்கார்ட்டில் ப்ரீ - புக்கிங் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பிற்கு தேவையான இதர அக்ஸசரிகளை தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். கறுப்பு நிற சர்ஃபேஸ் கோ டைப் கவரின் விலை ரூ.8,699 ஆகும். சிக்னேச்சர் டைப் கவரின் விலை ரூ. 11,799 ஆகும்.
Think big. Pack light. And MRP starting at INR 38,599 pack more for less. Pre-order the all new #SurfaceGo#OnlyOnFlipkart@Flipkarthttps://t.co/IYCMAo3jqy
— Microsoft India (@MicrosoftIndia) 15 December 2018
Microsoft Surface Go சிறப்பம்சங்கள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லேப்டாப்புகளில் மிகவும் எடை குறைவான, இலகுவான லேப்டாப்பாக இது அறிமுகமாகிறது.
இதன் எடை வெறும் 1.15 பவுண்ட்கள் (521 கிராம்) தான்.
மிகவும் இலகுவான (8.3 mm thin) இந்த லேப்டாப்பில் இண்டெல் நிறுவனத்தின் 7வது ஜெனரேசன் பெண்டியம் கோல்ட் 4415Y ப்ரோசசர் (Intel’s 7th generation Pentium Gold 4415Y processor) பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சர்ஃபேஸ் கோ லேப்டாப் விண்டோஸ் 10 S இயங்கு தளத்தில் இயங்கக் கூடியது.
விண்டோஸ் ஹெலோ செக்யூர் என்ற தொழில்நுட்ப உதவியுடன் ஃபேசியல் ரெகக்னைசேசன் சைன் இன் செய்து கொள்ளலாம்.
USB 3.1 யுனிவெர்சல் கனெக்டர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கனெக்டர் ஆப்பிளின் மேக்புக், மற்றும் மேக்புக் ப்ரோக்களில் பயன்படுத்தப்பட்டதாகும்.
Microsoft Surface Go கேமராக்கள்
5 எம்.பி செல்பி கேமராவும், 8 எம்.பி. ரியர் கேமராவும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1080p வீடியோக்கள் இந்த கேமரா மூலம் பதிவு செய்து கொள்ள இயலும்.
மேலும் படிக்க : புத்தகப் பிரியர்களிடம் நிச்சயமாக இருக்க வேண்டிய ஒரு டிவைஸ் இது தான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.