Advertisment

ஸ்மார்ட்போனில் ஒரே தொல்லை இதுதாங்க... ஆனா தப்பிக்க வழி இருக்கு!

Mobile phone spam message issue: ஒரு குறிப்பிட்ட எண்ணைப் புகாரளிக்க விரும்பினால், நீங்கள் ஒரு complaint பதிவு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
ஸ்மார்ட்போனில் ஒரே தொல்லை இதுதாங்க... ஆனா தப்பிக்க வழி இருக்கு!

Mobile phone tamil news

Mobile phone tamil news, Mobile phone spam message issue: ஸ்பேம் மெசேஜஸ் எப்போதும் நம்மை எரிச்சலூட்டும். இது போன்ற Spam text மெசேஜ்கள், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை விரைவாக காலி செய்து, மொபைல் Space-ஐ ஆக்கிரமித்துக் கொண்டு, முக்கியமான மெசேஜ்களை கீழே தள்ளிவிட்டு இவை வந்து அமர்ந்து கொள்கின்றன. இப்போதெல்லாம், இந்த தேவையற்ற text மெசேஜ்கள் நமது ஸ்மார்ட்வாட்ச்களின் பேட்டரியைக் கூட தீர்த்துவிடுகின்றன. இந்த ஸ்பேம் மெசேஜ்களை நீக்குவதற்கு நேரமும் முயற்சியும் தேவை. மேலும், இந்த text messagesகளில் சில malware கொண்ட இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்கலாம்.

Advertisment

இந்த text மெசேஜ்களை எவ்வாறு அகற்றுவது என்று நீங்கள் அடிக்கடி யோசித்திருந்தால், இங்கே சில தீர்வுகள் உள்ளன.

இந்த 5-ல் ஒரு போன் உங்ககிட்ட இருந்தாப் போதும்… அவசரத்திற்கு டாக்டர் தேவையில்லை

பெரும்பாலும் இந்த விளம்பர மெசேஜ்களை அனுப்பும் நிறுவனங்கள் இதனை தேர்வுசெய்ய அல்லது நிறுத்த ஒரு ஆப்ஷனை உங்களுக்கு வழங்குகின்றன. இருப்பினும், நீங்கள் முறையான நிறுவனங்களின் செய்திகளை நிறுத்த விரும்பினால் மட்டுமே இது பொருந்தும். ரேண்டம் எண்ணிலிருந்து சந்தேகத்திற்கிடமான மெசேஜஸ் பெற்றால், அதற்கு பதிலளிக்க வேண்டாம்.

Mobile phone spam message issue: மொபைல் போன் ஸ்பேம் மெசேஜ்

தேவையற்ற மெசேஜ்களை கொண்டு உங்களைத் தொந்தரவு செய்யும் எண்ணைத் தடுக்கலாம். ஐபோன் பயனர்கள், உங்களுக்கு மெசேஜ் கிடைத்த இடத்திலிருந்து தொலைபேசி எண்ணைத் தட்டவும், பின்னர் info buttonஐ க்ளிக் செய்யவும்.

அதில், ‘Block this caller’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதும். மறுபுறம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், நீங்கள் மெசேஜ்களை திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து, அதைத் தொடர்ந்து ‘Block number’ என்ற ஆப்ஷனை சொடுக்கவும்.

ITR 2020 filing: சிம்பிளா இதைப் பண்ணுங்க… கைகொடுக்கும் சூப்பரான 4 ‘ஆப்’கள்!

தேவையற்ற message-களிலிருந்து விடுபட நீங்கள் டி.என்.டி (Do not disturb) சேவையைத் தேர்வு செய்யலாம்.

ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து ஒரு குறிப்பிட்ட எண்ணைப் புகாரளிக்க விரும்பினால், நீங்கள் ஒரு complaint பதிவு செய்யலாம். அதற்காக, ‘1909’ ஐ டயல் செய்து புகாரை பதிவு செய்வதற்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். உங்கள் அழைப்பு வாடிக்கையாளர் சேவை நிர்வாகிக்கு அனுப்பப்படும். டெலிமார்க்கெட்டரின் பெயர், தொலைபேசி எண் அல்லது ‘AD-ALERTH’ போன்ற மெசேஜ் தலைப்பு, மெசேஜ் தேதி மற்றும் நேரம் மற்றும் பெறப்பட்ட மெசேஜ் சுருக்கம் உங்களிடம் கேட்கப்படும். புகார் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு ஒரு தனிப்பட்ட புகார் எண் வழங்கப்படும். ஏழு நாட்களுக்குள் டெலிமார்க்கெட்டருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mobile Phone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment