Mobile World Congress 2020 cancelled due to Coronavirus : கொரோனா வைரஸ் பீதியால் உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோ கண்காட்சியான மொபைல் வேல்ர்ட் காங்கிரஸ் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் நிறைய மொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய போன்கள் மற்றும் டிவைஸ்களை வெளியிடுவார்கள்.
எலெக்ட்ரானிக்ஸ் உலகின், பட்ஜெட் ஸ்மார்ட்போன் உலகின் ராஜாவாக வலம் வரும் சீனாவில் இருந்தும் நிறைய பேர் இந்த நிகழ்வில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த வருட துவக்கத்தில் இருந்தே கொரானா பீதியால் அனைவரும் பயந்து போய் இருக்க இந்த நிகழ்வினையே கேன்சல் செய்து அறிவித்துவிட்டது Mobile World Congress (MWC).
சோனி, விவோ, எச்.எம்.டி க்ளோபல் மற்றும் ஜிஎஸ்எம்ஏ போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களின் டிவைஸ்களை இந்த கண்காட்சியில் வெளியிட காத்துக் கொண்டிருந்தனர். 2006ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த வருடம் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சியோமியின் எம்.ஐ 10, எம்.ஐ 10 ப்ரோ ஸ்மார்ட் போன்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ரியல் மி நிறுவனத்திற்கு இந்த ஷோ முதல் ஷோவாகும். ரியல்மியின் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய X50 ப்ரோ வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஜப்பான் சொகுசு கப்பலில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்… தமிழர்களின் நிலை என்ன?