Moto G7 Power : இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது மோட்டோவின் புதிய போன் மோட்டோ ஜி7 பவர். இதன் விலை 13,999 ஆகும். (4ஜிபி+64ஜிபி). ஆஃப்லைன் ரீட்டைல் ஸ்டோர்களிலும், ஆன்லைனிலும் இந்த போனின் கறுப்பு நிற வேரியண்ட் மட்டுமே தற்போது கிடைக்கிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியானது இந்த போன். ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கக் கூடிய இந்த போனுடன் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 ப்ளஸ், மற்றும் மோட்டோ ஜி7 ப்ளே போன்ற போன்கள் வெளியாகியுள்ளன.
Moto G7 Power சிறப்பம்சங்கள் :
- தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த போனின் பேட்டரி திறன் 5000 mAh ஆகும்.
- 6.2 இன்ச் நீளம் கொண்டது
- ரெக்டாங்குலர் நோட்ச்சுடன் கூடிய இந்த போனின் ரெசலியூசன் 1520×720 பிக்சல்களாகும்
- குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 600 சீரியஸ் ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 12 எம்.பி. பிரைமரி கேமராவும், 8 எம்.பி செல்ஃபி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.