Moto G7 Specifications : ஜி சீரியஸில் வெளியாகும் மோட்டோவின் ஸ்மார்ட்போன்களுக்கு என்றுமே சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது ஜி7 போன் வெளியாகி மக்கள் மனதில் இடம் பெற துவங்கியுள்ளது.
மோட்டோவின் புதிய போன்களான மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்ட் ஒன் போன்கள் கடந்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஜி7 போனின் விலை 16,999 ஆகும். ஆண்ட்ராய்ட் 1 போனின் விலை 13,999 ஆகும். இந்த இரண்டு போன்களையும் மோட்டோ ஹப் ஸ்டோர்கள் மற்றும் ஃப்ளிப்கார்ட் இணைய தளம் மூலமாக வாங்கலாம்.
இராண்டு போன்களும் க்ளியர் ஒய்ட் மற்றும் செராமிக் ப்ளாக் நிறங்கிளில் வெளியாகிறது. ஸ்டோரேஜ் - 4ஜிபி+64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
மோட்டோ ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளையும், கேஷ் பேக் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 2000 ரூபாய் வரையில் கேஷ்பேக் பெறும் சலுகையையும் வழங்கியுள்ளது ஜியோ.\
இதில் எடுக்கப்படும் புகைப்படங்களும் மிக துல்லியமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
Moto G7 specifications and features
6.2 இன்ச் ஃபுல் எச்.டி. மற்றும் டிஸ்பிளே கொண்ட போன் இதுவாகும்.
19.9 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் யூ-ஷேப் நாட்ச் கொண்டுள்ளது இந்த போன்.
ஸ்நாப்ட்ராகன் 642 ப்ரோசசரில் இயங்கும் இந்த போனை 3,000mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி இயக்குகிறது.
கேமரா : 12+5 எம்.பி பின்பக்க கேமராக்களும், 8 எம்.பி. செல்ஃபி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
செக்யூரிட்டி : பேஸ் அன்லாக் மற்றும் பிங்கர் பிரிண்ட் அன்லாக் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் சாம்சங்கின் புதிய போன் வெளியீடு எப்போது ?