/tamil-ie/media/media_files/uploads/2019/04/moto-razr.jpg)
Moto Razr foldable Smartphone
Moto Razr foldable Smartphone : மோட்டோ நிறுவனம் வழங்க இருக்கும் புதிய ஃபோல்டபிள் போனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்சங் நிறுவனம் தங்களின் முதல் ஃபோல்டபிள் போனை வெளியிட்டு அறிவித்தது.
Moto Razr foldable Smartphone leaked first look
#Motorola - #Razr - New Motorola RAZR (2019) leaks out https://t.co/jxoTZuUC9Npic.twitter.com/h2Y0NyCS3q
— /LEAKS (@Slashleaks) 28 April 2019
அதனைத் தொடர்ந்து மொபைல் வேர்ல்ட் கான்ஃபிரஸில் ஹூவாய் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போன் வெளியானது. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் மடக்கு போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில் மோட்டோ நிறுவனத்தின் ரேஸர் வி4 என்ற ஃபோல்டபிள் போனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மற்ற போன்களைப்ப் போல் இல்லாமல், இந்த போன் நிச்சயமாக உங்களின் கைக்கு அடக்கமாக இருக்கும்.
ஸ்லாஷ்லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் இதன் ஃபர்ஸ் லுக் வெளியானது. இந்த போனின் விலை 1500 அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்றும், இது வரை 2 லட்சம் யூனிட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : ஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்?
Moto Razr foldable Smartphone Specifications
வொயகார் என்ற கோட்நேமில் வழங்கப்படும் இந்த மோட்டோ ரேஸர் போன் 6.2 இன்ச் ஓ.எல்.ஈ.டி. டிஸ்பிளே கொண்டுள்ளது. ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர் மட்டும் 2730mAh செயல்திறன் கொண்ட பேட்டரி இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.