Moto Z4 Odin : மோட்டோவின் புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ Z4 தான் முதல் 5ஜி அப்கிரேடபிள் போன். இந்த போனிற்கு முதலில் ஓடின் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் மோட்டோவின் ஜீ வரிசையில் வெளியாக உள்ளது இந்த போன். இந்த போனில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 8150 என்ற ப்ரோசசர் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த போன் முற்றிலுமாக 5ஜி மோட்டோ மோடினை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Moto Z4 Odin விரைவில் வெளியாக உள்ளது :
ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பயன்படுத்தி வரும் A12 பயோனிக் சிப்செட்டில் பயன்படுத்தப்பட்ட 7என்.எம். தொழில் நுட்பத்தினை போல், குவால்கோம் உருவாக்கியிருக்கும் முதல் 7 என்.எம். சிப்செட்டான ஸ்நாப்ட்ராகன் 8150 இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆப்பிள் நிறுவனத்திற்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் கடும் போட்டியை விளைவிக்கும் ஹூவாயின் 7nm சிப்செட்
இந்த ஓடின் போனானது ஆண்ட்ராய்ட் 9.0 பை என்ற இயங்கு தளத்தில் இயங்கும். இது மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ மோட்டினையும் சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போன் பற்றிய வேறேதும் சிறப்பு தகவல்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால் 4ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இண்ட்ர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாகும் என்ற தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு அமெரிக்க சந்தைகளில் மட்டுமே இதனை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது மோட்டோ நிறுவனம்.