Motorola Moto Z4 Specifications 360-degree camera MotoMod :மோட்டோவின் புதிய போனான Z4 இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது.
Moto Z4 Specifications
வட்டவடிவீலான மாடியூலில் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. க்வாட்கோட் டெக்னாலஜி மூலமாக நான்கு கேமராக்களின் பிக்சல்கள் ஒன்றிணைக்கப்பட்டு 12 எம்.பி. பிக்சலில் புகைப்படம் எடுத்துக் கொள்ள இயலும்.
செல்ஃபி கேமராவின் செயல்திறன் 25 எம்.பி. ஆகும்
4GB RAM+128GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 499.99 டாலராகும். இந்திய விலைப்படி ரூ.35,000.
6.4 இன்ச் ஃபுல் எச்.டி. + ஓ.எல்.ஈ.டி திரை கொண்ட ஸ்மார்ட்போன் இதுவாகும்.
2340 x 1080 பிக்சல்கள் ரெசலியூசன் கொண்டது
2.5D கொரில்லா க்ளாஸ் 3 மூலம் இந்த போன் பாதுகாக்கப்படுகிறது
ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசர் மூலம் செயல்படக் கூடிய இந்த போனில் 3600 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வாடிக்கையாளர்களின் ப்ரைவசி குறித்த சுந்தர் பிச்சையின் கருத்திற்கு ஆப்பிள் பதிலடி…
அமெரிக்காவில் அமேசான் மோட்டோவின் Z4 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது. இதில் வியப்பதிற்கு ஒன்றும் இல்லை தான். இருந்தாலும், மோட்டோவின் அந்த போனை இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தவே இல்லை என்பது தான். அந்த போனோடு 360 டிகிரி வரையில் புகைப்படம் எடுக்கக் கூடிய 360-degree camera MotoModயும் அந்த பேக்கேஜில் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த போனை வாங்கிய வாடிக்கையாளரும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் போனின் சிறப்பம்சங்கள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட மொத்த மோட்டோ நிறுவனமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மோட்டோவின் புதிய போனான Z4 இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து, அமேசான் அதனுடைய தளத்தில் இந்த போன் குறித்து அப்டேட் செய்து வைத்திருந்தது.
இந்த பிரச்சனைக்குப் பின்பு லிஸ்டில் இருந்து அந்த போன் நீக்கப்பட்டாலும் கூட கேச்சே மெமரியில் இருந்து அந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் பிரச்சனை என்ன என்றால் மோட்டோவின் அந்த போன் அந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டது தான்.