/tamil-ie/media/media_files/uploads/2019/08/ECFi26-XUAEZ_s9.jpg)
Motorola one action specifications, price, launch, availability
117 degree wide angle camera smartphone Motorola One Action features : மோட்டோ தன்னுடைய புதிய ஸ்மார்ட் போனான மோட்டோரோலா ஒன் ஆக்சன் என்ற போனை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த போன் 16ம் தேதி முதல் மெக்சிகோ, ப்ரேசில், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அக்டோபர் மாதம் முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய கண்டங்களுக்கும் இந்த போன் விற்பனை செய்யப்படும்.
117 degree wide angle camera smartphone Motorola One Action features
இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதன் 117-டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா தான். இந்த போனை வெர்டிக்களாக வைத்துக் கொண்டு லேண்ட்ஸ்கேப் ஃபார்மட்டிலும் புகைப்படம் எடுக்க இயலும்.
இது மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. முதன்மை கேமரா செயற்திறன் 12 எம்.பி. ஆகும். டெப்த் சென்சாரின் செயல்திறன் 5 எம்.பி. ஆகும். மூன்றாவது கேமரா 117-டிகிரி அல்ட்ரா வைட் கேமரா. இதன் செயற்திறன் 16 எம்.பி. குவாட் பிக்சல் ஆகும்.
6.3 இன்ச் அளவுள்ள சினிமாவிஷன் 21:9 ஃபுல் எச்.டி திரை இதுவாகும்
ஆக்டா கோர் ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த ஸ்டோரேஜ் 128 எம்.பி. ஆகும். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலமாக 512 ஜிபி வரை இதனை அதிகரித்துக் கொள்ளலாம்.
பேட்டரி : 3,500 mAh
இது ஆண்ட்ராய்ட் ஒன் ஓ.எஸ்.-இல் இயங்குவதால் இரண்டு வருட சாப்ஃட்வேர் அப்டேட் மற்றும் மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்டுக்கும் உத்தரவாதம் உண்டு.
விலை : 259 யூரோக்கள் (இந்திய விலைப்படி ரூ. 20,400)
மேலும் படிக்க : ரூ.10,000 விலையில் அறிமுகமாகிறது உலகின் முதல் க்வாட் கேமரா ஸ்மார்ட்போன்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.