பாப் -அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகிறது மோட்டோ ஒன் ஹைப்பர்!

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருமா வராதா என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது. 

Motorola One Hyper smartphone launches with pop-up selfie camera :  மோட்டோ நிறுவனம் தன்னுடைய பாப்-அப் செல்ஃபி கேமராவை ஒரு வழியாக அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே விவோ, ஓப்போ போன்ற மிட்ரேஞ்ச் போன்கள் துவங்கி, ஒன்ப்ளஸ் போன்ற ஹையர் எண்ட் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்து நிறுவனங்களும் தங்களின் பாப்-அப் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால் மோட்டோ நிறுவனம் மட்டும் தங்களுடைய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவில்லை என்று அனைவரும் வருந்திக் கொண்டிருந்த போது ஒருவழியாக ஹைப்பர் ஒன் வெளியாகிறது.

Motorola One Hyper smartphone specifications

டிசம்பர் மாதம் 3ம் தேதி பிரேசில் நாட்டில் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முக்கிய நபர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் எஃப்.சி.சி இணையத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 160mm உயரம் and 71mm அகலம் கொண்டது இந்த ஸ்மார்ட்போன். இதன் டிஸ்பிளே அளவு 6.69 இன்ச்களாகும்.

Wi-Fi 802.11 a/b/g/n/ac மற்றும் NFC ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்கிறது. நோட்ச் அற்ற தின் பெசலை கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

பாப்-அப் செல்ஃபி கேமராவின் செயற்திறன் 32 எம்.பி. ஆகும்.  இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 64எம்.பி முதன்மை கேமராவாகவும், 8 எம்.பி இரண்டாம் கேமராவாகவும் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருமா வராதா என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

விவோ வி15 ப்ரோ, ரியல்மீ எக்ஸ், ரெட்மீ கே20 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அறிமுகமாகிறது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் படிக்க : டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் நெட்வொர்க் கட்டண உயர்வு… தப்பிக்க வழி சொல்லும் ஏர்டெல்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close