Motorola One Macro specifications, price, availability, launch : சிறந்த புகைப்படங்களை எடுக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். மோட்டோ தற்போது மேக்ரோ எனப்படும், மிக நுண்ணிய உயிரினங்களை தெளிவாக படம் பிடிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. நாளை இந்த ஸ்மார்ட்போன் வெளியாவதை ஒட்டி, அதற்கான டீசரை வெளியிட்டது மோட்டோ ஃப்ளிப்கார்ட்.
Motorola One Macro specifications
மேக்ரோ ஃபோட்டோகிராஃபி மற்றும் ஃபோகஸிங் பீச்சருக்காகவே அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போனில் லாங்க் பேட்டரி லைஃப், ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளான.
6.2 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.
4ஜிபி/6ஜிபி ரேம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் 64ஜிபி ஆகும். அதற்கு மேற்பாடான ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
4000mAh பேட்டரி செயற்திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கேமரா 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். செல்ஃபிக்காக 8 எம்.பி. சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.