Motorola One Vision Smartphone Specifications, Launch, Price, Availability : மோட்டோ நிறுவனத்தின் புதிய போனான ஒன் விஷன் இந்த மாதம் பிரேசில் நாட்டில் வெளியானது. வெளியீட்டு விழாவில் இந்த ஸ்மார்ட்போன் ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.
இந்நிலையில் ’சேவ் தி டேட்' என்று ஜூன் 20ஐ மட்டும் குறிப்பிட்டு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் 20ம் தேதி மோட்டோவின் புதிய போன் ஒன்று அறிமுகமாக உள்ளது. ஆனால் அது ஒன் விஷனா என்பது குறித்த தகவல்களை தரவில்லை மோட்டோ நிறுவனம்.
Motorola One Vision Smartphone Specifications, Launch, Price, Availability
மோட்டோ ஸ்மார்ட்போன்களில் பன்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 48 எம்.பி. கேமரா சென்சார் கொண்ட முதல் மோட்டோ போனும் இது தான்.
6.3 இன்ச் ஃபுல் எச்.டி. டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.
ரெசலியூசன் 2520 x 1080 பிக்சல்கள்
சாம்சங் நிறுவனத்தின் எக்ஸினோஸ் 9609 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மலி-ஜி72 எம்.பி.3 (Mali-G72 MP3) - கிராபிக்ஸ் பிரோசசர் யூனிட்
ஸ்டோரேஜ் - 4ஜிபி ரேம் + 128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த போன்
பேட்டரியின் செயல்திறன் 3500 mAh
டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மூலமாக விரைவாக பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
Motorola One Vision Price
ஐரோப்பிய சந்தைகளில் இந்த போனின் விலை 299 யூரோ. இந்திய மதிப்பில் ரூ. 23,500.
One Vision Color
4D கொரில்லா க்ளாஸ் க்ரேடியன்ட் டிசைனில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஷாப்பையர் மற்றும் ப்ரான்ஸ் ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளது.
Moto One Vision Camera Specification
48MP குவாட் பிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5MP செகண்டரி கேமராவும் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிண்ட்டும் போனின் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் 25 எம்.பி. ஆகும்.
மேலும் படிக்க : CC World Cup 2019 : அனைத்து போட்டிகளையும் ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம்… ஜியோ அதிரடி!