Motorola P40 : ஹானர் நிறுவனம் வியூ20 என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இருக்கும் சில சிறப்பம்சங்கள் தற்போது மோட்டோவின் புதிய போனிலும் காணப்படுகிறது.
Advertisment
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மோட்டோவின் P30 என்ற போன் வெளியானது. அந்த சீரியஸ்ஸில் அடுத்த போனை உருவாக்கி வருகிறது மோட்டோ. P30 போன்களைப் போல் சீனாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது மோட்டோ.
Motorola P40 - லீக்கான வீடியோ
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் மோட்டோவின் P40 போனின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆன்லீக்ஸ்ஸில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மோட்டோவின் P40 மாடல், இன் டிஸ்பிளே ஹோல் செல்பி கேமராவையும், 48எம்.பி செயல்திறன் கொண்ட பின்பக்க கேமராவையும் கொண்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
Motorola P40 சிறப்பம்சங்கள்
இந்த இரண்டு சிறப்பம்சங்களும் தற்போது வெளியான ஹானரின் வியூ20யிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹானர் வியூ20, சாம்சங் கேலக்ஸி ஏ8 மற்றும் ஹூவாய் நோவா 4 போன்ற ஸ்மார்ட் போன்களிலும் இன் டிஸ்பிளே ஹோல் செல்ஃபி கேமரா இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் இந்த மோட்டோவின் புதிய போன் 160.1 x 71.2 x 8.7 mm என்ற அளவினை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3டி கர்வ்ட் எட்ஜெஸ்களுடன் கூடிய க்ளாஸ் பேக் டிசனை கொண்டிருக்கிறது இந்த போன். மோட்டோ லோகோ இருக்கும் இடத்தில், பிங்க்ர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.