Motorola’s foldable Razr secondary screen : முதன்முதலாக சாம்சங் நிறுவனம் தங்களின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை உலகிற்ற்கு அறிமுகம் செய்து வைத்தது. அடுத்த வாரத்திலேயே ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்தது.
தொடர் திருப்பங்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் ஹீட்டிங் எலமெண்ட்களுடன் உருவாகப் போகும் ஆப்பிளின் மடக்கு போனிற்கு பேட்டண்ட் ரைட்ஸ் வாங்கினார்கள். தற்போது அந்த வரிசையில் மோட்டோ நிறுவனம் தங்களின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Motorola’s foldable Razr secondary screen
புதிதாக வெளிவர இருக்கும் இந்த போனுக்கு மோட்டோரோலா ரேசர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மடக்கு போனின் இரண்டாவது ஃபோல்டபிள் டிஸ்பிளே குறித்த முக்கியமான தகவல் ஒன்றினையும் எக்ஸ்.டி.ஏ டெவலப்பர்கள் வெளியிட்டுள்ளனர்.
சிறப்பம்சங்கள்
மடக்கப்பட்ட டிஸ்பிளேவில் பயன்படுத்தப்படும் செயலிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோட்டோ டிஸ்பிளே, மோட்டோ ஆக்சன்ஸ், மற்றும் மோட்டோ கேமரா போன்ற மிக முக்கிய சிறப்பம்சங்களை மட்டுமே பயன்படுத்த இயலும்.
க்ளோஸ்ட் டிஸ்பிளேவாக செயல்படும் இந்த போனின் ஃபோல்டபிள் பகுதி ஸ்க்ரோலிங்கிறாகவும், குயிக் செட்டிங்ஸ் டிஸ்பிளேவிற்காகவும் பயன்படுத்தப்படும்.
கடிகாரம், மீடியா கண்ட்ரோல், மற்றும் நோட்டிஃபிகேஷன்களுக்கு இரண்டாம் டிஸ்பிளே உதவியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ல்ட் இண்டெலெக்சுவல் ப்ரோபெர்ட்டி ஆர்கனிசேனனில் தங்களுடைய புதிய டிவைஸிற்கு காப்புரிமம் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளது மோட்டோ. அதில் தான்
அதில் ஃபோல்டபிள் ஸ்கிரீனின் முழு அளவு, காம்செல் ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர தகவல்கள் தரப்பட்டுள்ளன.
ஆனால் எங்கும் ரேசர் லோகோ குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இதன் விலை 1500 டாலர்களாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : இரண்டில் எந்த போன் சிறந்தது சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் Vs ஹூவாய் மேட் எக்ஸ்