நோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்... புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்...

5.99 அங்குலம் QHD திரை கொண்ட போன் இதுவாகும். HDR10 சப்போர்ட்டினை பெற்றுள்ளது இந்த போன்.

Nokia 9 Pureview Launch : ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வு. இதில் தங்களுடைய புதிய போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது நோக்கியாவின் எச்.எம்.டி நிறுவனம்.

Nokia 9 Pureview Launch குறித்து ட்வீட் செய்த சி.பி.ஓ

அந்த நிறுவனத்தின் சி.பி.ஓ ஜூஹோ சர்விகாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நடைபெற உள்ள மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை நடத்த உள்ளது எச்.எம்.டி என்று குறிப்பிட்டார்.

ஆனால் எந்த போன்கள் வெளியாக உள்ளன என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் நோக்கியா 9 ப்யர்வியூ மற்றும் நோக்கியா 6.2 ஆகிய போன்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா போன்களிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ப்யூர்வியூ போன் தான் என்பதால், அதன் வெளியீட்டை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

Nokia 9 PureView போனின் சிறப்பம்சங்கள்

5.99 அங்குலம் QHD திரை கொண்ட போன் இதுவாகும். HDR10 சப்போர்ட்டினை பெற்றுள்ளது இந்த போன்.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ்ஜை பெற்றுள்ளது இந்த போன்.

ஆண்ட்ராய்ட் ஒன் இயங்கு தளத்தில் இயங்க உள்ளது.

இதே நிகழ்வில் நோக்கியா 6.2 போனையும் வெளியிட உள்ளது இந்நிறுவனம்.

Nokia 6.2 போனின் சிறப்பம்சங்கள்

நோக்கியா நிறுவனத்தின் இன் – ஸ்கிரீன் கேமராவைப் பெற்றிருக்கும் முதல் போன் இதுவாகும். ம்.

6.2 இன்ச் டிஸ்பிளே

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் – 632 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4GB/6GB RAM வேரியண்ட்களில் வெளியாகிறது.

மேலும் படிக்க : சியோமியின் நோட் 7 எப்படி இருக்கிறது ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close