Nokia 9 PureView : தற்போதெல்லாம் பின்பக்க கேமராக்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவது தான் தொழில்நுட்பத்தின் அடுத்த இலக்கு அல்லது அடுத்த கட்டம் என்ற நிலை உருவாகிவிடுகிறது.
ஏற்கனவே நான்கு பின்பக்க கேமராக்களுடன் கூடிய போனை Samsung Galaxy A9 அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்.
தற்போது அதற்கு அடுத்தபடியாக ஐந்து கேமராக்களை கொண்ட போனை அறிமுகம் செய்ய இருக்கிறது நோக்கியா. நோக்கியா 9 ப்யூர்வியூ (Nokia 9 PureView) என்ற அந்த போனை ஜனவரி மாதம் வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.
மேலும் படிக்க : நான்கு கேமராக்களுடன் வெளியான சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்
ஜனவரி மாத இறுதிக்குள் இந்த போன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேலை லாஸ் வேகஸில் நடக்க இருக்கும் சி.இ.எஸ் (CES) மாநாட்டில் அல்லது பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் மொபைல் வேர்ல் காங்கிரஸில் இந்த போன் வெளியாகலாம்.
Nokia 9 PureView சிறப்பம்சங்கள்
ஐந்து பின்பக்க கேமராக்கள், ஒரு எல்.இ.டி ஃப்ளாஷ் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் பின்பக்க வடிவமைப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கேமராவின் செயல் திறன்கள் இன்னும் வெளியாகவில்லை.
5.9 இன்ச் QHD திரையுடன் வெளியாகிறது.
18:9 ஸ்கீரின் டூ டிஸ்பிளே ரேசியோ
ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோசசர் பொருத்தப்பட்டிருக்கிறது.
6ஜிபி ரேம் / 128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கும்
பேட்டரி 4150mAh சேமிப்புத் திறன் கொண்டிருக்கிறது.
டெக்னிக்கல் பிரச்சனைகள் காரணமாக இந்த வரும் வெளியாக இருந்த போன் Nokia 9 PureView அடுத்த வருடம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.