நான்கு கேமராக்களுடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

இந்த போன் கருப்பு, வெள்ளை, மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாக உள்ளது...

Samsung Galaxy A9 : இதுவரை மூன்று பின்பக்க கேமராக்கள் கொண்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களைத் தான் நாம் பார்த்திருப்போம். நான்கு கேமராக்களைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

இந்தியாவில் அறிமுகமாகும் இந்த போனின் (6ஜிபி RAM) ஆரம்ப விலை ரூ. 36,990 ஆகும். 8ஜிபி RAM செயல் திறன் கொண்ட போனின் விலை ரூ. 39,990 ஆகும். இதன் உள்சேமிப்புத் திறன் அளவானது 128 ஜிபி ஆகும்.

அமேசான், ஃப்ளிப்கார்ட், சாம்சங் ஷாப், பேடிஎம் மால் மற்றும் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர்களில் 28ம் தேதி முதல் ப்ரீ – புக்கிங் செய்து கொள்ளலாம்.

எச்.டி.எஃப்.சி வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் இந்த ஃபோனை வாங்குபவர்களுக்கு 3000 ரூபாய் வரை கேஷ் பேக் பெற்றுக் கொள்ளலாம்.

Samsung Galaxy A9 சிறப்பம்சங்கள் என்னென்ன ?

இந்த போனின் சிறப்பம்சமே இதன் கேமரா தான் . நான்கு பின்பக்க கேமராக்களைக் கொண்டிருப்பதே இதன் ப்ளஸ் பாய்ண்ட். 8 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா ( f/2.4 aperture), 10 எம்.பி. டெலிபோட்டோ கேமரா (f/2.4 aperture மற்றும் 2x ஆப்டிக்கள் ஜூம் கொண்டிருக்கும்) 24 எம்.பி மெயின் கேமரா மற்றும் 5 எம்.பி டெப்த் கேமரா என்று நான்கு அட்டகாசமான கேமரா லென்ஸ்களை வைத்து உருவாகியுள்ளது இந்த போன். செல்பி கேமரா 24 எம்.பியுடன் கூடிய f/2.0 aperture செயல் திறனைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க : சாம்சங் அறிமுகப்படுத்தும் முதல் பெண்டபிள் போன் 

இதர சிறப்பம்சங்கள்

3D க்ளாஸ் பேக் பேனல் பொருத்தப்பட்டிருக்கும் இந்த போன் கருப்பு, வெள்ளை, மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாக உள்ளது. 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி + சூப்பர் AMOLED திரையுடன் வெளியாகிறது. ஸ்க்ரீன் அஸ்பெக்ட் ரேசியோ 18.5:9 ஆகும்.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 660 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி / 8ஜிபி RAM கொண்டுள்ள 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வெளியாகிறது. பேட்டரி 3,800mAh திறன் கொண்டது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.0 இயங்கு தளத்தில் வேலை செய்யும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close