Whatsapp new update : இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்கள் குறைவு எனலாம் அந்த அளவிற்கு வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது அதுவும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்சப் செயலியை வாங்கியதிலிருந்து அதன் அப்டேட்ஸ் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் நிறைய அப்டேட்டுகளை வழங்கி வரும் வாட்ஸ்ஆப் நிறுவனம், தற்போது பணம் அனுப்புவது மற்றும் பெறுவது தொடர்பான செயல்பாட்டில் வாட்ஸ்ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மிகவிரைவில் அது குறித்த அப்டேட்டினையும் நாம் பெறலாம்.
Whatsapp new update : வாட்ஸ்சப்பின் புதிய அப்டேட் விபரம் இதோ உங்களுக்காக
வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது, பணம் அனுப்புவது, குரூப் ஃபார்வேட் மெசஜ்களை நிபந்தனைக்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட அப்டேட்கள் வரவேற்பை பெற்றன.
ஆனால், வாட்ஸ்-அப் உள்ள குரூப்களில் அதன் பயன்பாட்டாளர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனை பயன்பாட்டாளர்கள் பார்க்கும்போது, அவர்களை குறிப்பிட்டோ அல்லது குறிப்பிட்ட நபரின் கருத்தையோ தேடுவது என்பது சிரமமான ஒன்றாகும்.
இந்த குறையை தீர்க்கும் வகையில்தான், தற்போது ‘அட்வான்ஸ் சர்ச்’ என்ற தேடல் அப்டேட் ஒன்றை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி தற்போது பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இன்னும் சில வாரங்களில் இது அனைவரது பயன்பாட்டிற்கு வரலாம்.
அதே போல் ஃபேஸ்புக்கிலும் கிரிப்டோகரன்சி வசதிகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ இதில் எந்த போனை வாங்கலாம்?