ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ : எந்த போன் வாங்கலாம் என்ற குழப்பமா?

48 எம்.பி 48MP Sony IMX586 சென்சார் கொண்ட முதன்மை கேமராவும், 5 எம்.பி செகண்டரி கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது

By: Updated: March 1, 2019, 03:51:30 PM

Xiaomi Redmi Note 7 vs Redmi Note 7 Pro: நேற்று இந்தியாவில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் வெளியாகின. கடந்த மாதம் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகின. சீனாவில் வெளியான வேரியண்ட்டுகளில் இருந்து இந்தியாவில் வெளியான போன்கள் கேமரா சிறப்பம்சங்கள் மாற்றமடைந்துள்ளன.

பட்ஜெட் வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு புதிய போன்களை ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தும் சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ரெட்மி  நோட் 5வால் அதிக வரவேற்பைப் பெற்றது.

அதன் பினு ரெட்மி நோட் 6 வெளியானது. ஆனாலும் 5-உடன் ஒப்பிடுகையில் அதன் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi Redmi Note 7 vs Redmi Note 7 Pro

இரண்டு போன்களும் ஒரே மாதிரியான வாட்டர் ட்ராப் நோட்ச் டிஸ்பிளெ கொண்டிருக்கும், பின்பக்கத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கிறது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

ரெட்மி நோட் 7 இரண்டு ரேம் வேரியண்ட்டுகளில் வெளியானது. 3ஜிபி ரேம்/32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் போன்களாகும். முதல் போனின் விலை ரூ.9,999 மற்றும் இரண்டாவது போனின் விலை ரூ.11,999 ஆகும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ போனும் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன. 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 13,999 ஆகும். 6ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.16,999 ஆகும்.

ரெட்மி நோட் 7 போனின் விற்பனை மார்ச் 6ல் ஆரம்பமாகிறது. ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் விற்பனை மார்ச் 13ம் தேதி ஆரம்பமாகிறது.

Xiaomi Redmi Note 7 vs Redmi Note 7 Pro வடிவமைப்பு

6.3 இன்ச் ஃபுல்.எச்.டி மற்றும் டிஸ்ட்பிளே கொண்டுள்ளது இந்த இரண்டு போன்களும். இதன் அஸ்பெக்ட் ரேசியோ 19.5:9. சாம்சங் எம்10 மற்றும் எம்20 போன்களில் இருப்பது போலவே வாட்டர்ட்ராப் நோட்ச் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான க்ளாஸி பாடி, மெட்டல் ப்ரேம், இரட்டை பின்பக்கக் கேமரா என ஒரே மாதிரியான சிறப்பம்சங்கள் கொண்டிருக்கின்றன. இரண்டும் வாட்டர் டைட் சீல்ட் செய்யப்பட்ட போர்ட்கள் மற்றும் P2i கோட்டிங்க் பெற்றுள்ளன.

நிறங்கள்

ரெட்மி நோட் 7 – ஆன்க்ஸி ப்ளாக், ரூபி ரெட், ஷேப்பயர் ப்ளூ நிறங்களில் இந்த போன் வெளியாகின்றன.  ரெட்மி நோட் 7 ப்ரோ போனின் நெப்ட்யூன் ப்ளூ, நெபூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களில் இந்த போன் வெளியாகின்றது.

கேமராக்கள்

நோட் 7 கேமரா 12எம்.பி மற்றும் 2 எம்.பி செகண்ட்ரி கேமராக்களையும், 13 எம்.பி செல்ஃபி கேமராக்களையும் கொண்டுள்ளது.

நோட் 7 ப்ரோ : 48 எம்.பி 48MP Sony IMX586 சென்சார் கொண்ட முதன்மை கேமராவும், 5 எம்.பி செகண்டரி கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. செல்பி கேமராவின் திறன் 13 எம்.பியாகும்.

மேலும் படிக்க : ஹூவாய் மேட் எக்ஸ் Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் இதில் எந்த போன் சிறந்தது ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Xiaomi redmi note 7 vs redmi note 7 pro specs compared

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X