Nubia Red Magic 5G specifications : நுபியாவின் இந்த ஸ்மார்ட் போன் பற்றி உங்களுக்கு தெரியுமா. உலகிலேயே 144 ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட முதல் கேமிங் ஸ்மார்ட்போன் இது தான். நுபியா ஸ்மார்ட்போனின் புது வரவான இந்த ஸ்மார்ட்போன் ஒரு வெறித்தனமான பீஸ்ட்டாகவே வெளியாகியுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 15000 ஆர்.பி.எம் ஃபிசிக்கல் பேஃன், ஸ்நாப்ட்ராகன் 865, 16ஜிபி ரேம், 256 ஜிபி யூ.எஃப்.எஸ் ஸ்டோரேஜ்ஜூடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. டூயல்மோட் 5ஜி கனெக்ட்டிவிட்டி மற்றும் 64 எம்.பி. மெய்ன் கேமராவையும் இது கொண்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த போனின் விலை என்ன?
8GB RAM/128GB மாடலின் விலை 3799 யுவான்கள். இந்திய விலைப்படி இதன் விலை ரூ. 40,300. e 12GB RAM/128GB வேரியண்டின் விலை 4099 யுவான். இந்திய விலைப்படி ரூ. 43,000. 12GB RAM/256GB வேரியண்ட்டின் விலை 4399 யுவான்கள். இந்திய விலைப்படி ரூ. 46,700 ஆகும். 16GB RAM/256GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 4999 யுவான் ஆகும். இந்திய விலைப்படி ரூ. 53,000 ஆகும். சீனாவில் மார்ச் 19ம் தேதி முதல் ஹேக்கர் ப்ளாக், மார்ஸ் ரெட், சைபர் நியான் மற்றும் லிமிட்டட் எடிசன் ட்ரான்ஸ்பரண்ட் கலர் ஆப்சன்களில் இந்த போன் கிடைக்கிறாது. லிமிட்டட் எடிசன் கலர்கள் 12GB RAM/256GB இந்த வேரியண்ட்டிற்கு மட்டும் தான்.
மேலும் படிக்க : இஸ்ரோவுடன் இணைந்த சியோமி… இந்த சிறப்பம்சம் வேறெந்த போனிலும் கிடையாது!
சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 6.65 இன்ச் ஃபுல் எச்.டி. + எ.எம்.ஒ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது. 240 ஹெர்ட்ஸ் ரெஸ்பான்ஸ் ரேட் இதற்கு உள்ளது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 865 ப்ரோசசர் மற்றும் ஆட்ரெனோ 650 ஜி.பி.யூவுடன் வெளியாகியுள்ளது. இவை இரண்டும் ஹை பெர்ஃபார்மென்ஸை தருவதற்காக ஓவெர் க்ளாக் செய்யப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 4500mAh செயல்திறன் கொண்டவை. இந்த போனை சார்ஜ் செய்வதற்காக 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியை கொண்ட சார்ஜர் தயாரிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"