October 30 OnePlus 6T and Apple Event : இன்று இந்தியாவில் இருக்கும் டெக் ப்ரியர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று தான் கூற வேண்டும். ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய போனான ஒன்ப்ளஸ் 6T நேற்றிரவு அமெரிக்காவில் வெளியானது. க்ளோபல் ரிலீஸை தொடர்ந்து இந்தியாவின் இன்று தங்களின் புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது.
Advertisment
OnePlus 6T நிகழ்ச்சியை லைவ் ஸ்ட்ரீமில் பார்ப்பது எப்படி ?
இன்று இரவு 8 மணி அளவில் இந்த நிகழ்வானது டெல்லியில் இருக்கும் KDJW அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போன் வாங்குபவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்க திட்டம் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிகழ்வினை ஒன்ப்ளஸ் இந்தியா இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாக பார்த்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
விலை
நேற்றைய அறிமுக விழாவில் மூன்று வேரியண்ட்டுகளின் விலையையும் அறிவித்தது ஒன்ப்ளஸ். இதற்கு முன்பு வெளியான ஒன்ப்ளஸ் போனின் விலை தான் இதற்கும் என்றாலும், நேற்று வெளியான போன்களில் 64ஜிபி வேரியண்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் 37,999ற்கு 6GB RAM/128GB சேமிப்புத் திறன் கொண்ட ஒன்ப்ளஸ் 6T விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒன்ப்ளஸ் நிறுவனம் 6T போனை அமெரிக்காவில் 30ம் தேதிக்கு நடத்த இருப்பதாகத் தான் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் அறிமுகமாகின்ற நிலையில் தேதியில் மாற்றத்தினை கொண்டு வந்தது.
இன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸ்கள் அறிமுகப்படுத்த உள்ளன. இந்நிகழ்ச்சி ப்ரூக்ளின் அகாடெமி ஆஃப் மியூசிக்கில் இருக்கும் ஹோவர்ட் கில்மன் அரங்கில் நடைபெற இருக்கிறது. நியூயார்க் நகரில் அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிக்கிறது.