Advertisment

இன்றைய ஷோ டாப்பர் யார் ? ஆப்பிளா அல்லது ஒன்ப்ளஸ்ஸா ?

ஒரே நாளில் நடக்கும் இரண்டு முக்கியமான நிகழ்வுகள்... இந்தியர்களின் விருப்பத் தேர்வாய் எது இருக்கும் ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
October 30 OnePlus 6T and Apple Event

October 30 OnePlus 6T and Apple Event

October 30 OnePlus 6T and Apple Event : இன்று இந்தியாவில் இருக்கும் டெக் ப்ரியர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று தான் கூற வேண்டும். ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய போனான ஒன்ப்ளஸ் 6T நேற்றிரவு அமெரிக்காவில் வெளியானது. க்ளோபல் ரிலீஸை தொடர்ந்து இந்தியாவின் இன்று தங்களின் புதிய போனை அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisment

OnePlus 6T நிகழ்ச்சியை லைவ் ஸ்ட்ரீமில் பார்ப்பது எப்படி ?

இன்று இரவு 8 மணி அளவில் இந்த நிகழ்வானது டெல்லியில் இருக்கும் KDJW அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போன் வாங்குபவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்க திட்டம் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிகழ்வினை ஒன்ப்ளஸ் இந்தியா இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாக பார்த்துக் கொள்ளலாம்.

விலை

நேற்றைய அறிமுக விழாவில் மூன்று வேரியண்ட்டுகளின் விலையையும் அறிவித்தது ஒன்ப்ளஸ். இதற்கு முன்பு வெளியான ஒன்ப்ளஸ் போனின் விலை தான் இதற்கும் என்றாலும், நேற்று வெளியான போன்களில் 64ஜிபி வேரியண்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 37,999ற்கு 6GB RAM/128GB சேமிப்புத் திறன் கொண்ட ஒன்ப்ளஸ் 6T விற்பனை செய்யப்பட உள்ளது.

8GB RAM/128GB சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூபாய் 39,999 மற்றும் 8GB RAM/256GB சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூ.44,999. இந்த போன் பற்றிய முழுமையான தகவல்களைப் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்கள் அறிமுக விழா

ஒன்ப்ளஸ் நிறுவனம் 6T போனை அமெரிக்காவில் 30ம் தேதிக்கு நடத்த இருப்பதாகத் தான் திட்டமிட்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் அறிமுகமாகின்ற நிலையில் தேதியில் மாற்றத்தினை கொண்டு வந்தது.

இன்று ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸ்கள் அறிமுகப்படுத்த உள்ளன.  இந்நிகழ்ச்சி ப்ரூக்ளின் அகாடெமி ஆஃப் மியூசிக்கில் இருக்கும் ஹோவர்ட் கில்மன் அரங்கில் நடைபெற இருக்கிறது. நியூயார்க் நகரில் அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பிக்கிறது.

ஆப்பிள் பயனாளிகள் லைவ்ஸ்ட்ரீமில் இந்த நிகழ்ச்சியினை தங்களின் ஐபோன்கள், ஐபேட்கள், மற்றும் மேக்கில் பார்த்துக் கொள்ளலாம். எட்ஜ் எக்ஸ்போளரரிலும் இந்நிகழ்வினை பார்க்கலாம். இன்று என்னென்ன டிவைஸ்களை வெளியிட உள்ளது ஆப்பிள் நிறுவனம் ?

https://www.apple.com/apple-events/ என்ற இணைப்பில், லைவ்ஸ்ட்ரீமில் இந்த விழாவின் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Oneplus Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment