OnePlus 6T McLaren Edition : இன்று மும்பையில் நடைபெறுகிறது இந்த போனின் அறிமுக விழா. 10ஜிபி RAM கொண்டு இயங்கும் இந்த போன் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வ்ராப் சார்ஜ் டெக்னாலஜியுடன் வெளியாகும் இந்த போன், இந்த நிறுவனத்தின் லிமிட்டட் எடிசன் போன்களில் ஒன்றாகும். டிசம்பர் 13ம் தேதியில் இருந்து இந்த போன் மேற்கு ஐரோப்பாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 649 யூரோ (ரூ. 58,500) ஆகும்.
OnePlus 6T McLaren Edition அறிமுக விழா
இந்தியாவில் இந்த போன் இன்று மாலை சரியாக 6 மணிக்கு மும்பையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் குறித்தும், அதன் அறிமுக விழா குறித்தும் உடனக்குடனான தகவல்களை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்கள் அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நிகழ்ச்சியின் லைவ் ஸ்ட்ரீம் இந்த முறை இல்லை.
OnePlus 6T McLaren Edition சிறப்பம்சங்கள்
மெக்லாரென் கார்பன் இழை கொண்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்ப்ளஸ் லோகோ பின்பக்க கேமராவின் கீழும், மெக்லாரென் லோகோ போனின் அடிப்பக்கத்திலும் பொறுத்தப்பட்டிருக்கிறது.
கறுப்பு மற்றும் பப்பாளி ஆரஞ்ச் என இரண்டு நிறங்களில் வெளியாகிறது இந்த போன்.
வாட்டர் ட்ராப் நோட்ச்சுடன் கூடிய 6.4 இன்ச் திரை
ஃபுல் ஹெச்.டி + AMOLED டிஸ்பிளே
845 குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் ஓ.எஸ்ஸில் (OxygenOS) இயங்குகிறது இந்த போன்.
20 நிமிடம் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் போனை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பமான வ்ராப் சார்ஜ் 30 என்ற தொழில் நுட்பத்தை இந்த போனில் பயன்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.
10ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
மேலும் படிக்க : சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 6T போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை