/tamil-ie/media/media_files/uploads/2019/04/OnePlus-7-2-2.jpg)
OnePlus 7 first sale starts from June 4
OnePlus 7 first sale starts from June 4 : இந்த மாதத்தின் 14ம் தேதி லண்டன், நியூயார்க் மற்றும் பெங்களூரு மாநகரங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய போனான ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வெளியிடப்பட்டது. அத்துடன் ஒன்ப்ளஸ் 7 போனும் வெளியானது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ஏற்கனவே விற்பனைக்கு வந்த நிலையில், அந்நிறுவனம் ஒன்ப்ளஸ் 7 போனின் விற்பனை ஜூன் மாதம் துவங்கும் என்று கூறியிருந்தது.
OnePlus 7 first sale starts from June 4 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வருகின்ற ஜூன் 4ம் தேதி முதல், இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் இந்த போன். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
We're just getting started! The OnePlus 7 drops on the 4th of June on @amazonIN ⏰
Get notified here ????https://t.co/5MvGMHhPSApic.twitter.com/E37pgs8Rxb
— OnePlus India (@OnePlus_IN) 29 May 2019
OnePlus 7 Specifications
6.41 இன்ச் ஆப்டிக் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது
2340×1080 பிக்சல்கள் ரெசலியூசனைப் பெற்றுள்ளது
2.84GHz ஆக்டோ-கோர் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது
கிராபிக்ஸ் யூனிட் - ஆட்ரெனோ 640
ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகள் - 6GB RAM+128GB ROM மற்றும் 8GB RAM+256GB ROM
ஆண்ட்ராய் 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓ.எஸ். 9.5 ஸ்கின் இயங்கு தளத்தில் இயங்குகிறது.
3,700mAh பேட்டரி திறன் கொண்டவை. மிரர் க்ரே மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.
48 எம்.பி. ப்ரைமரி மற்றும் 5 எம்.பி. செகண்ட்ரி என இரட்டை பின்பக்க கேமராக்களையும், 16 எம்.பி. செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
OnePlus 7 விலை
6ஜிபி/128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 32,999 ஆகும்
8ஜிபி/256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 37,999 ஆகும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.