OnePlus 7, OnePlus 7 Pro launch Livestream : நியூயார்க் நகரில் இந்த போனின் அறிமுக விழா நடைபெறுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பெங்களூரிலும், இங்கிலாந்தின் லண்டனிலும் இந்த போனின் அறிமுக விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஒன்ப்ள்ஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போன்களும் அறிமுகமாகின்றன.
Advertisment
பெங்களூருவில் அமைந்திருக்கும் பெங்களூரு இண்டெர்நேசனல் எக்ஷிபிசன் சென்டரில் இன்று இரவு சரியாக 08:15 மணிக்கு இந்த போனின் அறிமுக விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டிக்கெட்டுகளை ரூ.999க்கு கடந்த மாதம் விற்பனை செய்தது ஒன்ப்ளஸ். சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
OnePlus 7, OnePlus 7 Pro : முன்பதிவு
Advertisment
Advertisements
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போனிற்கான முன் பதிவு செய்ய ஒரு மாதத்திற்கு முன்பே அமேசானில் ஆப்சன்கள் வழங்கப்பட்டுவிட்டன. 1000 ரூபாய் கட்டி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது.
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போனை நீங்கள் க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.
விலை
இது நாள் வரையிலும் எந்த விலைக்கு இந்த போன்கள் விற்பனை செய்யப்படும் என்று ஒன்ப்ளஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இந்நிறுவனம் கொடுத்த விளம்பரத்தில் 2000 டாலர்கள் என விற்க மாட்டோம் என்று குறிப்பிட்டபடியால் அனைவரும் வாங்கும் விலைக்கு இந்த போன்கள் விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ பேஸ் வேரியன்டின் விலை ரூ.49,999 ஆக இருக்கலாம். ஒன்ப்ளஸ் 7 போனின் விலை ரூ.38,999 ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.