OnePlus 7 Pro launch on May 14 : நீண்ட நாட்களாக ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பு இந்த ஒன்ப்ளஸ் 7 ப்ரோ தான். கடந்த வருடம் ஒன்ப்ளஸ் 6டி மற்றும் மெக்ளாரன் வேரியண்ட்டுகளை வெளியிட்ட பின்பு புது அப்டேட் குறித்து எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது 7 ப்ரோ மாடலை வெளியிட உள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த போன் குறித்த முழுமையான வடிவத்தை வெளியிட்டு அசத்தியது நியூயார்க் டைம்ஸ் செய்தி தாள். அந்த விளம்பரத்தின் அடிப்படையில் நோ பெல்ஸ், நோ விசில்ஸ், நோ பெசல், நோ நோட்ச், நோ ஆப் லாக், நோ ப்ளோட்வார், நோ 2000 டாலர் ப்ரைஸ் டாக், நோ ரேண்டம் மியூசிக் என்று அறிவித்திருந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
OnePlus 7 Pro சிறப்பம்சங்கள்
பாப் - அப் செல்ஃபி கேமராவுடன் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன்.
இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போன்கள் முழுக்க முழுக்க ஒன்ப்ளஸ் ப்ராண்ட்களை முன்பு அறியாதவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டியது நியூயார்க் டைம் பத்திரிக்கை.
நியூயார்க் நகரில் வெளியாகும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போன்கள் தொடர்ந்து லண்டன் மற்றும் பெங்களூருவில் வெளியாகிறது.
6.67 இன்ச் சூப்பர் ஆப்டிக் டூயல் கர்வ்ட் ஃபுல் ஸ்கிரின் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது இந்த போன்.
48 எம்.பி + 8 எம்.பி + 16 எம்.பி செயல்திறன்கள் கொண்ட கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ் : 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
பேட்டரி : 30W WARP சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய 4,000mAh பேட்டரி
மேலும் படிக்க : வீடியோகிராஃபிக்கான சிறந்த மிரர்லெஸ் கேமராவை வெளியிட்டு அசத்திய முன்னணி நிறுவனம் !