/tamil-ie/media/media_files/uploads/2019/05/D6iV9ACU8AAh0sA.jpg)
Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era
OnePlus 7 Pro Price : 14ம் தேதி வெளியானது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போன். அமெரிக்கா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் போன் வெளியிடப்பட்டது. இந்த போன் இன்று மதியம் 12 மணியிலிருந்து அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது.
4ம் தேதி முதல் 1000 ரூபாய் முன்பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் இந்த போனை தற்போது பெற்றுக் கொள்ளலாம்.
Which #OnePlus7Pro color is your favorite? pic.twitter.com/ooH7NRfImE
— OnePlus (@oneplus) 14 May 2019
OnePlus 7 Pro: Price in India, launch offers :
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போனின் விலை : ஆரம்ப வேரியண்ட்டின் விலை ரூ. 48,999 ஆகும். 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 52,999 ஆகும்.
12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 57,999 ஆகும்.
ஒன்ப்ளஸ் 7 போனின் விலை
ஒன்ப்ளஸ் 7 ஜூன் மாதத்தில் தான் விற்பனைக்கு வருகிறது. 6ஜிபி +128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.32,999 ஆகும். 8ஜிபி+256ஜிபி போனின் விலை ரூ. 37,999 ஆகும்.
அறிமுகச் சலுகை
எஸ்.பி.ஐ க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் இந்த போனை வாங்குபவர்களுக்கு 2000 ரூபாய் கேஷ்பேக் அளிக்கப்படும்.
ஜியோ நிறுவனம் ரூ.9300 மதிப்புள்ள சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.
கலர் வேரியண்ட்கள்
ஒன்ப்ளஸ் 7 ப்ரோவின் மிரர் கிரே போன் இன்று முதல் விற்பனையாகிறது. நெபுலா நீல நிற ஸ்மார்ட்போன் மே 28 முதலும், ஒன்ப்ளஸ் 7ப்ரோவின் ஆல்மண்ட் நிறம், ஒன்ப்ளஸ் 7னின் மிரர் கிரே மற்று ரெட் வேரியண்ட்கள் ஜூனில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.