Oppo drops R Series Smartphones : ஓப்போ தங்களின் புதிய போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்து அதனை மெருகேற்றும் முயற்சியில் இருப்பதால் தற்போது ஆர் சீரியஸ் போன்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது. புதிதாக வெளியாகி வரும் ரெனோ சீரியஸ் மற்றும் ஃபைண்ட் எக்ஸ் போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷென் யிரேன் கூறியுள்ளார்.
Oppo drops R Series Smartphones - காரணம் என்ன ?
இனி அந்த சீரியஸில் போன்கள் வெளியாகாது என்பதையும் அறிவித்துள்ளார். இந்த போன் சீரியஸை கைவிடுவதற்கு சரியான காரணம் இது தான் என ஷென் கூறவில்லை இருப்பினும் ப்ரீமியம் போன்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் தர உள்ளது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து புதிதாக டெக்னாலஜியும், காம்பட்டீடர்களும் வளர்ந்து வரும் சூழலில் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய டெக்னாலஜியில் போன்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஏற்கனவே ஓரளவு மட்டுமே வரவேற்பினை பெற்ற போன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தால், வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் சிக்கல் நிலவும் என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளது ஓப்போ நிறுவனம்.
ஆர் சிரியஸ் போன்கள் பார்ப்பதற்கும் வடிவம் மற்றும் கேமரா போன்ற சிறப்பம்சங்களில் ப்ரீமியமாக இருந்தாலும், ஒன்ப்ளஸ் ப்ரீமியம் போன்கள் போன்று மக்கள் மத்தியில் நல் வரவேற்பினை இந்த ஸ்மார்ட்போன்கள் பெறவில்லை.
புதிதாக வந்திருக்கும் ரெனோ சீரியஸில் ஷார்க் - ஃபின் பாப்-அப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர், 10 மடங்கு அதிக ஜூம் செயல்திறன் கொண்ட ஹைப்ரிட் லென்ஸ்கள், ட்ரிப்பிள் ரியர் கேமராக்கள் என அசத்தல் வடிவம் பெற்று வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ரெனோ போன்கள் விரைவில் வெளியாக உள்ளது. ஐரோப்பாவில் ரெனோ போன்கள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ரூ. 10,000-க்குள் நல்ல கேமரா ஸ்மார்ட்போன் வாங்கனுமா ? இந்த லிஸ்ட்ட செக் பண்ணுங்க!