Oppo F11 Pro : தற்போது நிறைய போன் நிறுவனங்களின் எண்ணமெல்லாம் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவர்வது தான். ப்ரீமியம் போன்கள் என்றாலே ஆப்பிள், சாம்சங் கேலக்ஸி எஸ் சீரியஸ், ஹூவாய் மேட், ஒன்ப்ளஸ் போன்கள் என்று ஆன பின்பு, மற்ற நிறுவனங்கள் பட்ஜெட் போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
சியோமி ஏற்கனவே நோட் 5, நோட் 6, நோட் 7 மற்றும் அதன் ப்ரோ வேரியண்ட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகின்றது. சாம்சங் நிறுவனமும் தற்போது எம் சீரியஸில் போன்களை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஓப்போ நிறுவனம் நேற்று ஓப்போவின் F11 Pro ஸ்மார்ட்போனை வெளியிட்டது.
இந்த போனின் விலை ரூ.24,990 ஆகும்.
Oppo F11 Pro Design, display :
V15 போனை சமீபத்தில் தான் வெளியிட்டது ஓப்போ நிறுவனம். அதன் தொடர்ச்சியாக தற்போது ஓப்போவின் புதிய போனும் அறிமுகமாகியுள்ளது.
இந்த இரண்டு போன்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இரண்டும் பாப்-அப் செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளது.
பாப்-அப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் பெசல் விட்த் தேவையில்லை. மூன்று பக்கங்களிலும் பெசல் கிடையாது.
பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த போன்கள் வெளியாகின்றன.
6.5 இன்ச் ஃபுல் எச்.டி. எல்சிடி திரை கொண்டது.
மீடியா டெக் ஹெலியோ பி.70 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6ஜிபி ரேம் செயல்திறன் கொண்ட இந்த போன் கலர் ஓ.எஸ்.6.0வில் இயங்கக் கூடியது.
4000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனில் VOOC 3.0 என்ற சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரிசையாக 48 எம்.பி. கேமராக்கள் கொண்ட போன்கள் வெளியாகும் சூழலில் இந்த போனும் 48 மெகா பிக்சல் கேமராவுடன் களம் இறங்கியுள்ளது.
f/2.4 அப்பார்ச்செர் கொண்ட 5MP இரண்டாம் கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பட்ஜெட் 20000க்குள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?