ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

6.4  இன்ச் சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி இன்ஃபினிட்டி - யூ டிஸ்பிளே போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவருகின்றன.

By: Updated: March 5, 2019, 05:10:27 PM

Top mobiles under Rs 20,000 : ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒவ்வொரு டாப் ப்ராண்டிற்கும் ஒரு போன் என குறைந்தது 10 போன்களாவது வெளியாவது வழக்கம். பட்ஜெட் வாரியாகவும், சிறப்பம்சங்கள் வாரியாகவும், வாடிக்கையாளர்கள் தேவை வாரியாகவும் போன்களின் தேர்வு ஒவ்வொருவருக்கும் வேறாக அமையும்.

Top mobiles under Rs 20,000

ரெட்மி நோட் 7 ப்ரோ

மிக சமீபத்தில் தான் வெளியானது ரெட்மியின் நோட் 7 ப்ரோ. 48 எம்.பி. செயல்திறன் கொண்ட Sony IMX586 லென்ஸூடன் இந்த போன் வெளியானது.

ரெட்மி நோட் 7 போனின் விலை 4GB RAM / 64GB சேமிப்புத் திறன் கொண்ட போனின் விலை ரூ.13,000 ஆகும்.

6ஜிபி/128ஜிபி வெர்ஷன் போனின் விலை ரூ.16,999.

மேலும் படிக்க : ரெட்மி நோட் 7 Vs ரெட்மி நோட் 7 ப்ரோ : எந்த போன் வாங்கலாம் என்ற குழப்பமா?

சாம்சங் கேலக்ஸி ஏ30

இந்தியாவில் சாம்சங் ஏ சிரியஸ் போனின் விலை ரூ.25,000க்கும் அதிகமாகத்தான் கிடைக்கின்றது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் இதற்கு விதி விலக்கு. இந்த ஏ30 போனின் விலை ரூ.16,990 ஆகும்.

கேமரா : 16 எம்.பி+5எம்.பி செயல்திறன் கொண்ட இரட்டை பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

4000 mAh பேட்டரி மற்றும் 15 Watts அதிவேக சார்ஜிங் டெக்னாலஜி மற்றும் 6.4  இன்ச் சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி இன்ஃபினிட்டி – யூ டிஸ்பிளே போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவருகின்றன.

ஆசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2

6.3 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, மிகவும் மெல்லிய பெசல் விட்த்துடன் வெளியாகிறது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ராசசர் கொண்டு செயல்படும் இந்த போனின் பேட்டரி திறன் 4000 mAh ஆகும்.

ஒரு முறை இந்த போனை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோட்ச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த போனின் ஃபினிஷிங் மேட் ஃபினிஷிங்காக இருக்கிறது. ப்ரோ M2வானது க்ளோஸி ஃபினிஷிங்கில் வெளியானது.

இந்த போனின் விலை 4GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.14,999 மற்றும் 6GB RAM/64GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 16,999 ஆகும்.

சியோமி போக்கோஃபோன் எஃப்1

சியோமியின் போக்கோ ஃபோனின் விலை ரூ.19,999 ஆகும். இதன் ஸ்டோரேஜ் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் ஆகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Top mobiles under rs 20000 for march 2019 redmi note 7 pro galaxy a30 realme 2 pro and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X