ஓப்போவின் புதிய மிட்ரேஞ்ச் ப்ரிமியம் போன் இந்தியாவில் அறிமுகமானது...

வூக் சார்ஜ் ( VOOC Flash Charge ) தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் இந்த போனின் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது

Oppo R15 Pro : ஓப்போ ஆர்15 ட்ரீம் மிரர் எடிசனின் புதிய வடிவம் தான் இந்த ஓப்போ ஆர்15 ப்ரோ. ஏற்கனவே சீனா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த போனை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது இந்நிறுவனம்.

அமேசான் வர்த்தக இணைய தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த போனின் விலை 25,990 ஆகும். (6GB RAM/128GB internal storage )

காஸ்மிக் பர்ப்ள், ரூபி சிவப்பு என்ற இரு வண்ணங்களில் வெளி வருகிறது இந்த போன்.

கவனிக்கத்தக்க வேண்டிய சிறப்பம்சமாக இருப்பது வூக் ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டெண்ட் பில்ட் மட்டும் தான்.

Oppo R15 Pro சிறப்பம்சங்கள்

6.28 இன்ச் ஃபுல் எச்.டி + ஆன் செல் ஓ.எல்.இ.டி திரையுடன் வெளிவருகிறது இந்த போன்

போனின் ரெசலியூசன் 2280 x 1080

அஸ்பெக்ட் ரேசியோ : 19:9

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 660 ப்ரோசசர் மற்றும் ஆட்ரெனோ 512 ஜி.பி.யூ இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 8.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட கலர் ஓ.எஸ். 5.0 ஸ்கின் இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன்.

3,430mAh நான் ரிமூவபிள் பேட்டரி இதில் இணைக்கப்பட்டுள்ளது. வூக் சார்ஜ் ( VOOC Flash Charge ) தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் இந்த போனின் பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா

20 எம்.பி பிரைமரி கேமராவும், 16 எம்.பி செகண்டரி கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

20 எம்.பி. செல்பி கேமரா இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : செல்ஃபி பிரியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஹானர் லைட் 10

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close