விரைவில் வெளியாக இருக்கும் ரெனோ 2… புதிய டீசரால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் இந்த போன்கள் ஓசன் ப்ளூ, மற்றும் லுமினஸ் ப்ளாக் நிறங்களில் இந்த போன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Oppo Reno 2 video teaser reveals colour options, design ahead of launch
Oppo Reno 2 video teaser reveals colour options, design ahead of launch

Oppo Reno 2 video teaser reveals colour options : சீனாவில் வருகின்ற 10ம் தேதி ஓப்போவின் ரெனோ 2 ஸ்மார்ட்போன் வெளியாவைத் தொடர்ந்து புதிய டீசர் சீனாவின் புகழ்பெற்ற சமூக வலைதளமான வெய்போவில் வெளியானது. அதில் சீனாவில் எப்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது மற்றும் அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகின.

மூன்று அழகான கலரில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. டீப் சீ க்ளோ, ஓசன் ஹார்ட் மற்றும் மிஸ்டி பவ்டர் என்ற மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாவதை உறுதி செய்துள்ளது புதிய டீசர். இந்தியாவில் இந்த போன்கள் ஓசன் ப்ளூ, மற்றும் லுமினஸ் ப்ளாக் நிறங்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : இந்த வாரம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒரு பார்வை

Oppo Reno 2 specifications

6.55 இன்ச் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டது இந்த ஸ்மார்ட்போன்

20:9 அஸ்பெக்ட் ரேசியோ கொண்டது இந்த ஸ்மார்ட்போன்

ஸ்க்ரீன் டூ பாடி ரேசியோ : 93.1

கொரில்லா க்ளாஸ் 6 ப்ரோடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்கிரின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

இதன் பேட்டரி பவர் 4,000 mAh

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி ப்ரோசசர் இதில் இடம் பெற்றுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் வரை இதன் சேமிப்புத் திறன் இடம் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது,

கேமரா 48 எம்.பி. முதன்மை கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்.பி. டெப்த் சென்சார் இதில் பொறுத்தப்பட்டுள்ளது.

செல்ஃபி கேமரா 16 எம்.பி. செயல் திறன் கொண்டது

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Oppo reno 2 video teaser reveals colour options design ahead of launch

Next Story
இந்த வாரம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்… என்ன போன் வாங்க போறீங்க?Xiaomi Redmi Note 8 Pro Oppo Reno2 Vivo Z1X smartphones
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com