Advertisment

புத்தம் புதிய வடிவமைப்புடன் வெளியாகியுள்ள ஓப்போவின் ரெனோ Z ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் ஒரு பார்வை

Oppo Reno Z Camera Specifications : 48 எம்.பி சோனி IMX586 ப்ரைமரி சென்சார் மற்றும் 5எம்.பி. டெப்த் சென்சார் என இரண்டு பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Oppo Reno Z Smartphone Specifications

Oppo Reno Z Smartphone Specifications

Oppo Reno Z Smartphone Specifications : ஓப்போவின் புதிய போனான ரெனோ Z ஐரோப்பாவில் இன்று வெளியானது. ரெனோ சீரியஸில் 10x Zoom, ரெனோ 10X Zoom 5G ஸ்மார்ட்போன்கள் முதலில் சீனாவில் வெளியானது. பின்னர், ஐரோப்பாவில் வெளியானது.

Advertisment

இந்த போன்களுக்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ரெனோவின் Z ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சுறாவின் செதில் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் பாப் அப் கேமரா தான்.

Oppo Reno Z Smartphone Price and Color

இதன் விலை யூரோ 190 (ரூபாய் 15,000) ஆகும். ஓசன் க்ரீன் மற்றும் ஜெட் ப்ளாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகிறது.

Oppo Reno Z Smartphone Specifications

ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது

6.4 இன்ச் ஃபுல் எச்.டி + ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை

2340 x 1080 பிக்சல் ரெசலியூசன்

19.5:9 அஸ்பெக்ட் ரேசியோ

வாட்டர்ட்ராப் ஸ்டைல் நோட்ச் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்

Oppo Reno Z Smartphone கேமராக்கள்

48 எம்.பி சோனி IMX586 ப்ரைமரி சென்சார் மற்றும் 5எம்.பி. டெப்த் சென்சார் என இரண்டு பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. 32 எம்.பி. செல்ஃபி கேமராவையும் இது பெற்றுள்ளது.

இந்த பாப் அப் கேமரா சுறாவில் இருக்கும் பக்கவாட்டு செதில் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

3,950mAh சேமிப்புத் திறன் கொண்ட பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்ட் 9 பையை அடிப்படையாக கொண்ட கலர்ஓ.எஸ்.6 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

மேலும் படிக்க : சாம்சங் கேலக்ஸி A50-க்கு இப்படி ஒரு தள்ளுபடியா ? ஆடிப்போன வாடிக்கையாளர்கள் !

Oppo India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment