வெஸ்ப்பா ஸ்கூட்டியின் புதிய மாடல்: ஆகஸ்ட் முதல் வாரம் விற்பனைக்கு வருகிறது

ப்ளாக் மேட்டில் வந்து அசத்தும் வெஸ்ப்பா... விலை என்னவென்று தெரியுமா?

By: July 27, 2018, 8:08:08 PM

Piaggio Vespa Notte 125 : மிகவும் அழகான stylish வெஸ்ப்பா ஸ்கூட்டியின் புதிய மாடலான நோட்டே 125 இந்தியாவில் அறிமுகமாகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியிருந்த இந்த பைக்கினை இந்தியாவில் ஆகஸ்ட்டில் விற்பனைக்கு வைக்க இருப்பதாக வெஸ்ப்பா அறிவிப்பு.

ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் இந்த ஸ்கூட்டியின் முன்பதிவினை தொடங்குமாறு டீலர்களிடம் வெஸ்ப்பா நிறுவனம் கூறியிருக்கிறது.

Piaggio Vespa Notte 125 வின் சிறப்பம்சங்கள்

125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரின் ”நோட்டே” இத்தாலிய வார்த்தைக்கு இரவு என்று பொருள். இந்த ஸ்கூட்டியின் மொத்தமும் முழுமையான கருப்பு நிறத்தில் வெளிவர இருக்கிறது.

  • ஏர் கூல்ட் இஞ்சின்
  • 10 ப்ரேக் ஹார்ஸ் பவர்
  • 10.6 என்.எம். பீக் டார்க்
  • ட்யூப்லெஸ் டயர்

என்று பல சிறப்பம்சங்களுடன் வரும் இந்த பைக்கின் விலை ரூ. 70,285 (டெல்லி எக்ஸ். ஷோரூம்) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான பி.எம்.டபுள்யூ பைக்குகளின் புகைப்படங்களை காண

ஏற்கனவே டிவிஎஸ் NTorq 125, ஹோண்டா க்ராசியா, மற்றும் நியூ சுஜுக்கி பர்க்மன் ஸ்ட்ரீட் 125 ஆகியவை இந்த ஸ்கூட்டிக்கு போட்டியாக களத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Piaggio Vespa Notte 125 புகைப்படங்கள்

Piaggio Vespa Notte 125 Piaggio Vespa Notte 125 Piaggio Vespa Notte 125 Piaggio Vespa Notte 125

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Piaggio vespa notte 125 sales will start on august first week

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X