Qualcomm Snapdragon 712 Processor : ஒரு போனின் அடிப்படை செயல்பாடு என்பது அதன் ப்ரோசசர் மற்றும் ரேம் செயல்பாட்டினைக் கொண்டுதான். தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் அதிக அளவு குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் பயன்படுத்தப்படுகிறது.
Qualcomm Snapdragon 712 Processor அறிமுகம்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 712 ப்ரோசசர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரின் அப்கிரேட் லெவல் ஆகும். மிட் - ரேஞ்ச் ஆண்ட்ராய்ட் போன்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த ப்ரோசசர். 712 ப்ரோசசர் 10 என்.எம் ப்ரோசசஸ் கொண்டு உருவாக்கப்பட்டது.
மேலும் படிக்க : ஒரே நாளில் வெளியான நான்கு மோட்டோ போன்கள்
செண்ட்ரல் ப்ரோசஸ் யூனிட்டின் க்ளாக் ஸ்பீடானது 2.2GHz முதல் 2.3GHz வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த 10% செயல்பாட்டினை அதிகரிக்கும் இந்த ப்ரோசசர்.
710 ப்ரோசசர் நோக்கியா 8.1, லெனவோ Z5s, ஓப்போ ஆர்17 ப்ரோ ஆகிய போன்களில் இந்த ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 710 ப்ரோசசரைப் போலவே 712 ப்ரோசசர் குயிக் சார்ஜ் 4+தொழில் நுட்பத்தை ஆதரிக்கும். இந்த ப்ரோசசர் ஸ்நாப்ட்ராகன் X15 LTE மோடமுடன் வெளியாக உள்ளது. இதன் டவுன்லோட் ஸ்பீட் 800 Mbps ஆகும்.