/tamil-ie/media/media_files/uploads/2019/07/D-jPRZgU4AYiQy8.jpg)
Realme X Smartohone Specifications, Price, Availability, launch
Realme X Smartohone Specifications, Price, Availability, launch in India : புதுடெல்லியில் வருகின்ற ஜூலை 15ம் தேதி புதிய ரியல்மீயின் ஸ்மார்ட்போனான Realme X வெளியாக உள்ளாது. அதனுடன் சேர்ந்தே இந்த போனின் ஸ்பைடர்மேன் மாடலும் வெளியாக உள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ X லைட் போனுடன் வெளியானது.
ஜூலை 15ம் தேதி வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த போனின் விலையும் அன்றே அறிவிக்கப்படும். இருப்பினும் சீனாவின் விலைக்கு ஏற்றவாறு, இந்திய ரூபாயில் இங்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Realme X specifications
சீனாவில் வெளியான Realme X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 6.5 ஃபுல் எச்.டி. பெசல் அற்ற ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது.
திரைக்குள்ளே செயல்படக்கூடிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
16 எம்.பி மோட்டோரைஸ்ட் பாப்-அப் செல்ஃபி கேமராவும், 48 எம்.பி செயல்திறன் கொண்ட முன்பக்க கேமராவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரில் இயங்கக் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கூகுள் 9.0 பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ColorOS 6 இயங்கு தளத்தில் இது செயல்பட்டு வருகிறது.
Realme X Smartphone விலை
4ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,499 யுவான் (ரூ. 15,000) ஆகும்.
6ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,599 யுவான் (ரூ. 16,000) ஆகும்.
8ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,799 யுவான் (ரூ. 18,000) ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.