ரூ. 5,799க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சியோமி… இந்த ஆஃபர் ஜூலை வரை மட்டுமே!

Xiaomi Redmi 7A online sales : நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் வெளியாகும் இந்த போனுக்கு இரண்டு வருட வாரண்டியையும் தருகிறது சியோமி நிறுவனம்.

By: Updated: July 5, 2019, 07:33:41 AM

Xiaomi Redmi 7A Smartphone Priced at Rs. 5,799 : ரெட்மி 6ஏவின் தொடர்ச்சியாக ரெட்மி 7ஏ இந்தியாவில் வெளியாகயுள்ளது. இதன் விலை அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு ரூ. 5,799க்கு விற்பனையாக உள்ளது.  நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் வெளியாகும் இந்த போனுக்கு இரண்டு வருட வாரண்டியையும் தருகிறது சியோமி நிறுவனம்.

ஜூலை மாதம் மட்டுமே இதற்கான அறிமுக விலை ரூ. 5,799 ஆக ( 2GB RAM/16GB storage) இருக்கும். அதன் பின்னர் இந்த போனின் விலை ரூ. 5999க்கு விற்பனை செய்யப்படும். ஃப்ளிப்கார்ட் மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த போன் ஜூலை 11ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஆஃப்லைனிலும் இந்த போன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் 32ஜிபி வேரியண்ட் விலை ரூ. 6,199 ஆகும்.

Xiaomi Redmi 7A சிறப்பம்சங்கள்

5.45 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது

18:9 அஸ்பெக்ட் ரேசியோ

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 439 ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது.

Xiaomi Redmi 7A Smartphone Camera : சியோமி ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் Sony IMX486 சென்சார் கொண்ட 12 எம்.பி. பின்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5 எம்.பி. செல்ஃபி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

பேட்டரி செயல்திறன் 4,000mAh

இரட்டை சிம்கார்ட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : உலகம் முழுவதும் கோளாறான வாட்ஸ்ஆப்… ஃபேஸ்புக்கும் முடங்கியதால் சோகமான நெட்டிசன்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Xiaomi redmi 7a smartphone priced at rs 5799 specifications and all other features

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X