ஜூலை 15ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரியல்மீ X ஸ்மார்ட்போன்…

8ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,799 யுவான் (ரூ. 18,000) ஆகும்.

By: Updated: July 5, 2019, 07:33:38 AM

Realme X Smartohone Specifications, Price, Availability, launch in India : புதுடெல்லியில் வருகின்ற ஜூலை 15ம் தேதி புதிய ரியல்மீயின் ஸ்மார்ட்போனான Realme X வெளியாக உள்ளாது. அதனுடன் சேர்ந்தே இந்த போனின் ஸ்பைடர்மேன் மாடலும் வெளியாக உள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மீ X லைட் போனுடன் வெளியானது.

ஜூலை 15ம் தேதி வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த போனின் விலையும் அன்றே அறிவிக்கப்படும். இருப்பினும் சீனாவின் விலைக்கு ஏற்றவாறு, இந்திய ரூபாயில் இங்கு மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : பட்ஜெட் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்… ரூ. 5,799க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சியோமி…

Realme X specifications

சீனாவில் வெளியான Realme X ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 6.5 ஃபுல் எச்.டி. பெசல் அற்ற ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது.

திரைக்குள்ளே செயல்படக்கூடிய ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

16 எம்.பி மோட்டோரைஸ்ட் பாப்-அப் செல்ஃபி கேமராவும், 48 எம்.பி செயல்திறன் கொண்ட முன்பக்க கேமராவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரில் இயங்கக் கூடிய இந்த ஸ்மார்ட்போன் கூகுள் 9.0 பையை அடிப்படையாக கொண்டு செயல்படும் ColorOS 6 இயங்கு தளத்தில் இது செயல்பட்டு வருகிறது.

Realme X Smartphone விலை

4ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,499 யுவான் (ரூ. 15,000) ஆகும்.

6ஜிபி/64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,599 யுவான் (ரூ. 16,000) ஆகும்.

8ஜிபி/128ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 1,799 யுவான் (ரூ. 18,000) ஆகும்.

மேலும் படிக்க : ஸ்பைடர்மேன் எடிசனில் ரியல்மீ X ஸ்மார்ட்போன் வெளியீடு… வெறித்தனமான ரசிகர்கள் என்றால் இப்படித்தான் போல!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Realme x smartohone specifications price availability launch in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X