ரூ.4799க்கு ஒரு ஸ்மார்ட்போன்... திகைத்துப்போன ரெட்மி வாடிக்கையாளர்கள்

5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்.பி. பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்.பி. பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Redmi Go 16GB storage variant

Redmi Go 16GB storage variant

Xiaomi Redmi Go 16GB storage variant launched at Rs 4,799 : ரெட்மி கோ - மிகச்சிறந்த பட்ஜெட் போனாக பார்க்கப்பட்ட இந்த போனின் புதிய ஸ்டோரேஜ் வேரியண்ட் தற்போது வெளியாகியுள்ளது. 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அந்த போனின் விலை வெறும் ரூ. 4799 மட்டுமே.  சியோமியின் ஆன்லைன் ஸ்டோர்கள், ஃபிளிப்கார்ட், எம்.ஐ. ஹோம், எம்.ஐ. ஸ்டோர்களில் இந்த போனை நீங்கள் வாங்கலாம்.

Xiaomi Redmi Go 16GB storage variant launched at Rs 4,799

Advertisment

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி கோவின் முதல் போன் வெளியானது. ஆண்ட்ராய்ட் கோ இயங்கு தளத்தில் இயங்கி வருகிறது இந்த போன்.

ஸ்டோரேஜ் வசதி தவிர்த்து முதல் போனின் அனைத்து சிறப்பம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

குவால்கோம் 425 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது

5 இன்ச் அளவுள்ள எச்.டி. திரையை கொண்டுள்ளது

ஹைப்ரிட் சிம் ஸ்லாட் இருப்பதால் நீங்கள் இரண்டு சிம்கார்ட்கள் அல்லது ஒரு சிம்கார்ட் + ஒரு மெமரி கார்ட் என்றும் நீங்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

ஆண்ட்ராய்ட் கோ இயங்குதளமானது, பட்ஜெட் விலையில் சிறப்பான ஸ்மார்ட்போன்கள் செயல்பாட்டினை பழக்கத்திற்கு கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது.

யூட்யூப் கோ, கூகுள் மேப்ஸ் கோ, ஜிமெயில் கோ, மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் கோ என குறைவான டேட்டாவில் பயன்படுத்தக் கூடிய கோ வெர்ஷன் ஆப்கள் இதில் அப்லோட் செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வருகிறது.

5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 8 எம்.பி. பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் படிக்க : கடற்பச்சை நிறம்… மீன் செதில் வடிவ பாப்-அப் கேமரா… புதுசு புதுசா யோசிக்கும் ஓப்போ!

Xiaomi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: